Royal Enfield Electric Bike பற்றிய செம அப்டேட்! எல்லோரும் இப்பவே பணத்தை ரெடி பண்ணுங்க!

தற்போது ஆட்டோமொபைல் துறையில் இவிகளின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள ஆட்டேமொபைல் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தத் துவங்கிவிட்டனர். இந்தியாவிலும் பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் களம் இறங்கிவிட்டனர்.

இதில் ராயல் என்ஃபீல்டு மட்டும் விதி விலக்கா என்ன? இந்நிறுவனம் தனது தனித்துவமான பைக்குகளால் பிரபலமான நிறுவனமாக இருந்தாலும் எலெக்ட்ரிக் வாகன பிரிவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறது. இதற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒரு எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வருகிறது, என்ற செய்தி நாம் எல்லோருக்கும் தெரியும்.

Royal Enfield Electric Bike

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஸ்பானீஷ் நாட்டைச் சேர்ந்த ஸ்டார்க் மோட்டார்சைக்கிள் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை தயாரித்து வருகிறது. இந்த பைக்கிற்கு L1A என்ற கோட் பெயரை வைத்துள்ளது. இந்த L1A பைக் தயாராகும் பிளாட்ஃபார்ம் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யும் பைக்குகளை தயாரிக்கும் வல்லமை பெற்றது.

இந்நிலையில் இந்த ராயல் என்ஃபீல்டின் முதல் எலெக்ட்ரிக் பைக் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் முதல் புரோட்டோடைப் இந்தாண்டு இறுதியில் மக்கள் முன் காட்சிக்கு வரும் என்றும், அடுத்த ஆண்டு (2024) முதல் பாதியில் இந்த பைக் விற்பனைக்கே வந்துவிடும் எனத் தெரியவந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் பைக்கான L1A என்ற பைக் அதிக ஃபெர்பாமென்ஸ் கொண்ட பைக்காக இருக்காது எனத் தெரியவந்துள்ளது. மாறாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கே உள்ள பிரத்தியேக குணமான பிரிமியம் மற்றும் கெத்தான ரக பைக்காக இருக்கும் எனத் தெரிகிறது.

இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் மோட்டார் பைக் ஸ்டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இன்ஃப்ளூயன்ஸில் ஆஃப் ரோடிங் பெர்ஃபாமென்ஸ் கொண்ட பைக்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பைத் தமிழகத்தில் செய்யவே திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே நடத்தி வரும் வல்லம் வடங்கல் தொழிற்சாலையிலேயே இது தயாரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்யாறு பகுதியில் இந்நிறுவனம் 60 ஏக்கர் நிலப் பரப்பில் புதிய தொழிற்சாலை அமைக்கவுள்ளது. அந்த தொழிற்சாலை 2025ம் ஆண்டு தயாராகும் என எதிர்பார்க்கலாம். அந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டதும். வல்லம் வடங்கலில் இருந்து புதிய தொழிற்சாலைக்கு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகள் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 12, 2023, 9:59 [IST]
English summary
Royal enfield electric bike launch next year timeline revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+