ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக் விலை இவ்ளோதானா! சந்தோஷம் தாங்க முடியலயே! ஷோரூம்ல இப்பவே ஒரு ஆளை பிடிக்கணும்!

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) தற்போது நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) என பல வகையான எலெக்ட்ரிக் வாகனங்களும் இந்திய சந்தையில் அறிமுகமாகி வருகின்றன.

அத்துடன் முன்னணி நிறுவனங்கள் பலவும் எலெக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு கொண்டுள்ளன. இதில், ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனமும் ஒன்று. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அடுத்த ஆண்டு (2024) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த புதிய மாடலை உருவாக்கும் பணிகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக் விலை இவ்ளோதானா! சந்தோஷம் தாங்க முடியலயே! ஷோரூம்ல இப்பவே ஒரு ஆளை பிடிக்கணும்!
Image used for representation purpose only

களத்தில் இறங்கிய புதிய குழுக்கள்!

இதற்காக புதிய குழு ஒன்றை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கிற்கு உயிர் கொடுக்கும் பணிகளை இங்கிலாந்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குழுவும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற நிறுவனங்களில் பணியாற்றி வரும் திறமைமிக்க நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை பணியில் சேர்க்கும் வேலையையும் ராயல் என்பீல்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அவரையே தூக்கீட்டாங்களா!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை டெக்னிக்கல் அதிகாரியான உமேஷ் கிருஷ்ணப்பா சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இணைந்திருப்பது இதற்கு ஒரு உதாரணம். அத்துடன் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு என பிரத்யேகமான பிளாட்பார்ம் ஒன்றை உருவாக்கும் பணிகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் இந்த புதிய பிளாட்பார்ம் 'L' என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த பிளாட்பார்ம்மை பயன்படுத்தி பல்வேறு பாடி ஸ்டைல்களில் எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்க முடியும்.

ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக் விலை இவ்ளோதானா! சந்தோஷம் தாங்க முடியலயே! ஷோரூம்ல இப்பவே ஒரு ஆளை பிடிக்கணும்!
Image used for representation purpose only

இவ்ளோ பெரிய இலக்கா!

இந்திய சந்தை மட்டுமல்லாது, சர்வதேச சந்தைகளையும் குறிவைத்துதான் ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்கவுள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 1.20 லட்சம் முதல் 1.80 லட்சம் வரையிலான எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டுவதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சிங்கிள் சார்ஜில் எவ்ளோ கிமீ ஓடும்?

எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக், 2024ம் ஆண்டின் இரண்டாவது பாதியில், அதாவது ஜூலை-டிசம்பர் காலகட்டத்தில் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக்கில், ஒரு முறை முழுமையாக நிரப்பினால் சுமார் 250 கிலோ மீட்டர்கள் பயணிக்க கூடிய வகையிலான பேட்டரி வழங்கப்படலாம்.

விலை இவ்ளோதானா!

பொதுவாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள்தான் தொலைதூர பயணங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை பெருக்கினால், பெட்ரோல் பைக்குகளை போலவே தொலைதூர பயணங்களையும் எளிதாக மேற்கொள்ள கூடிய வகையில் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ச் (Range) இருக்கலாம். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை (Price) 3 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனம் பிரீமியமான எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர்கள் பயணிக்க கூடிய ஒரு பிரீமியமான எலெக்ட்ரிக் பைக்கிற்கு 3 லட்ச ரூபாய் என்பது சிறப்பான விலை நிர்ணயமாக இருக்கலாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் மாதங்களில் வெளியிடும் என வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 8, 2023, 17:15 [IST]
English summary
Royal enfield electric bike price range everything you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+