ராயல் என்பீல்டும் அந்த எரிபொருளில் ஓட கூடிய பைக்க தயாரிக்க போகுதா! இந்தியர்கள் வெறி தனமா காத்திருக்க போறாங்க!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா (Toyota), அதன் 100 சதவீதம் எத்தனாலில் ஓடக் கூடிய இன்னோவா எம்பிவி (Innova MPV) கார் மாடலை இந்தியாவில் வெளியீடு செய்தது. ஆமாங்க, இந்த காரின் இயக்கத்திற்கு ஒரு துளிகூட பெட்ரோல் தேவைப்படாது.

இத்தகைய சூப்பரான வசதி உடன் எலெக்ட்ரிஃபைடு அம்சத்தையும், அதாவது, ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் அது சேர்த்திருந்தது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை இந்த கார் தொங்கிக் கொண்டிருக்கின்றது. இதனாலேயே, இந்த காரின் வருகை மீது இந்தியர்களுக்கு எதிர்பார்ப்பு தற்போது பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

Royal enfield flex fuel bike confirmed

இந்த நிலையிலேயே ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் சூப்பரான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. நிறுவனம் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் (Flex Fuel)-இல் இயங்கும் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதன் அறிமுகத்தை வரும் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் எதிர்பார்க்கலாம் எனவும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

ஆனால், நிறுவனம் எந்த மோட்டார்சைக்கிளை ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்கிற விபரங்களை தெரிவிக்கவில்லை. அதேவேளையில், எங்களின் யூகிப்பின்படி நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் மோட்டார்சைக்கிள் மாடலான கிளாசிக் 350-யையே அது ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் ஓடும் வாகனமாக உருவாக்கிக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

ராயல் என்பீல்டு நிறுவனம் மட்டும் இல்லைங்க இன்னும் பல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. டிவிஎஸ் தொடங்கி ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களே ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் ஓடும் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

இவை மட்டுமில்லைங்க இன்னும் பல நிறுவனங்கள் இந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றன. ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்களை இந்தியாவில் களமிறக்குவதில் அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்தியா இவ்வளவு தீவிரமாக இதில் களமிறங்குவதற்கான அவசியம் என்ன என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பி இருக்கக் கூடும்.

நாட்டிற்கு தேவையான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அரசு பெரும் தொகையை செலவழிக்க வேண்டி இருக்கின்றது. இதனால் ஏற்படும் அந்நிய செலாவணி இழப்பை தவிர்க்கும் பொருட்டே இந்தியா ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகனத்தை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டிக் கொண்டு இருக்கின்றது.

இதனால், பெட்ரோல் தேவையைப் பெருமளவிில் குறைக்க முடியும் என அரசு நம்புகின்றது. அதுமட்டுமில்லைங்க, பெட்ரோலுடன் எத்தனாலை களக்குவதனால் வாகனம் வெளியிடும் கார்பன் அளவும் குறைவதாகக் கூறப்படுகின்றது. இதுபோன்ற பல நன்மைகள் இருப்பதன் காரணத்தினாலேயே அரசு ஃப்ளெக்ஸ் ஃப்யூவலில் இயங்கும் வாகனத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டிக் கொண்டு இருக்கின்றது.

வாகன உற்பத்தி நிறுவனங்களும் இந்த ரக வாகனங்களை உற்பத்தி செய்வதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பெட்ரோல் மற்றும் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளே ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ஆகும். இப்போதைய நிலவரப்படி இ10 ரக பெட்ரோலே பயன்பாட்டில் இருக்கின்றது. விரைவில் இ20 ரக பெட்ரோலையும் அரசு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

அதாவது, 20 சதவீதம் எத்தனால் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் சேர்க்கப்பட்ட எரிபொருளையே அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் பிஎஸ் 6 ஸ்டேஜ் 2 தர வாகனங்கள் அனைத்தும் இந்த எரிபொருளில் இயங்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எத்தனால் தயாரிப்பிற்கு குறைவான செலவே ஆகும். குறிப்பாக, அது விவசாய கழிவையும், தானிய வகையை நம்பி இருப்பதால் இதன் உற்பத்திக்கு இந்தியா பிற நாடுகளை நம்பி இருக்க வேண்டியது இல்லை. எனவேதான் முழுமையாக எத்தனால் பயன்பாட்டிற்கு மாறும்போது பல வழிகளில் நன்மைகள் இந்தியாவிற்கும், இந்தியர்களுக்கும் வந்து சேரும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 6, 2023, 10:36 [IST]
English summary
Royal enfield flex fuel bike confirmed here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+