கிளாசிக் 350யை விட சூப்பரான பைக்கை களமிறக்க ராயல் என்பீல்டு தயாராகிருச்சு.. டூ-வீலர் காதலர்கள் ஹேப்பி!
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக கிளாசிக் 350 (Classic 350) காட்சியளிக்கின்றது. இதுவே இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ராயல் என்பீல்டு பைக் மாடலும் ஆகும். இந்த பைக்கிற்கே டஃப் கொடுக்கும் வகையில் புதிதாக ஓர் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் தன்னுடைய வருங்கால புதுமுக இருசக்கர வாகனத்திற்கான பெயரையே நாட்டில் பதிவு செய்திருக்கின்றது. கோன் கிளாசிக் 350 (Royal Enfield Goan Classic 350) எனும் பெயருக்கே அது டிரேட்மார்க் பதிவை செய்திருக்கின்றது.

இது ஓர் கிளாசிக் 350 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாபர் வகை மோட்டார்சைக்கிளாக இருக்கும் என கூறப்படுகின்றது. ஆனால், இது என்ன மாதிரியான இருசக்கர வாகனம் என்பது பற்றிய விபரத்தை ராயல் என்பீல்டு இதுவரை அறிவிக்கவில்லை. விரைவில் இந்த வாகனம் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் அது அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவிற்காக மிகப் பெரிய பிளானையே உருவாக்கி இருக்கின்றது. நிறுவனம் தொடர்ச்சியாக புதுமுக வாகனங்களால் இந்திய இருசக்கர வாகன பிரிவை அலங்கரிக்க இருக்கின்றது. இதன் அடிப்படையில் வரும் நாட்களில் நிறுவனத்திடம் இருந்து கிளாசிக் மற்றும் ஹிமாலயன் அடிப்படையிலான வாகனங்கள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவற்றின் வரிசையிலேயே விரைவில் நிறுவனத்தின் கோன் கிளாசிக் 350 இணைய இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் வருகை மற்ற பிராண்டுகளின் பாபர் வகை மோட்டார்சைக்கிள்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராயல் என்பீல்டு நிறுவனம் ஓர் புதுமுக, அதாவது, பெயரிடப்படாத ஓர் பாபர் வகை மோட்டார்சைக்கிள் வலம் வந்தது பற்றி தகவல்கள் வெளியாகின.
ஒருவேளை அது கோன் கிளாசிக் 350-ஆக இருக்குமோ என்கிற சந்தேகம் நமக்கு எழும்பி இருக்கின்றது. முற்றிலும் மாறுபட்ட தோற்றைத்தைக் கொண்டதாக அந்த பாபர் மாடல் மோட்டார்சைக்கிள் இருந்தது குறிப்பிடத்தகுந்தது. பொதுவாக, பாபர் மோட்டார்சைக்கிள் என்றால் ஒற்றை இருக்கை அமைப்பை மட்டுமே கொண்டிருக்கும்.
ஆனால், நிறுவனத்தின் இந்த புதிய பாபர் மோட்டார்சைக்கிள் பில்லியனுக்கான இருக்கையையும் கொண்டிருந்தது. ஆகையால் ராயல் என்பீல்டின் இந்த புதிய பாபர் ஸ்டைல் மோட்டார்சைக்கிள் மற்ற பாபர் வகை டூ-வீலர்களிடம் இருந்து பெரிய அளவில் மாறுபட்டுக் காட்சியளிக்கும் என்பது மிக தெளிவாக தெரிகின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக சற்று உயரமான தோற்றத்தில் ஹேண்டில்பார், நீர் நிலைகள் நிறைந்த சாலையை சமாளிக்கக் கூடிய வகையில் மேல் நோக்க பார்த்த எக்சாஸ்ட் சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த பைக் தாங்கி இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைத் தாங்கியதாகவே அந்த பைக் காட்சியளிக்கின்றது.
ஆனால், சமீபத்தில் ஸ்பை செய்யப்பட்ட இந்த பைக்கிற்குதான் இப்போது டிரேட்மார்க் பதிவு செய்யப்பட்டு இருக்கும் பெயர் சூட்டப்படும் என்பதற்கான உறுதியான தகவலும் வெளியாகவில்லை. அதேவேளையில், இந்த பெயருடன் அது விற்பனைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. இந்த பைக்கில் 349 சிசி ஏர்-ஆயில் கூல்டு மோட்டாரே வழங்கப்பட இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக சமீப சில மாதங்களாக நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை தொடர்ச்சியாக வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் தயாரிப்புகளை புதுப்பித்தும், புதிய தயாரிப்புகளை விற்பனைக்குக் களமிறக்குவதிலும் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








