ராயல் என்பீல்டுக்கு யாராச்சும் சூன்யம் வச்சுட்டாங்களா! நல்லா விற்பனையாகும் பைக்கை வெளியேற்ற போறாங்களா!!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி இருசக்கர வாகன மாடல்களில் ஹிமாலயன் 411 (Himalayan 411)-ம் ஒன்றாகும். இந்த மோட்டார்சைக்கிளையே விற்பனையில் இருந்து ராயல் என்பீல்டு விரைவில் வெளியேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சாம்ராஜ்யம் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் விரிவடைந்ததில் இந்த பைக்கிற்கும் பங்கு உண்டு. இத்தகைய ஓர் மோட்டார்சைக்கிளையே அந்நிறுவனம் விற்பனையில் இருந்து அகற்ற இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்வெளியாகி உள்ளன. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதுமுக வாகனத்திற்கு வழி விடும் விதமாக இந்த வாகனம் வெளியேற்றம் செய்யப்பட இருக்கின்றது.

Royal enfield himalayan discontinue

அட்வான்ஸ்டு மற்றும் கூடுதல் பவர்ஃபுல் மாடலாக ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் 450 மாடலை உருவாக்கி இருக்கின்றது. இது மிக சிறந்த நிலையில் ஹிமாலயன் 411 இல்லாத இடத்தைப் பூர்த்தி செய்யும் என நிறுவனத்தால் நம்பப்படுகின்றது. எனவேதான், இதன் வருகைக்கு வழிவிடும் விதமாகவே ஹிமாலயன் 411 வெளியேற்றம் செய்யப்பட இருக்கின்றது.

அட்வென்சர் ரைடை அதிகம் விரும்புவோரின் ஃபேவரிட் மோட்டார்சைக்கிளாக ஹிமாலயன் 411 இருக்கின்றது. லாங் மற்றும் ஜாலி ரைடிற்கு ஏற்ற பைக் மாடலாக இது இருக்கின்றது. இந்த பைக்கை நிறுவனம் 2016 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த பைக் இந்தியாவில் மட்டுமில்லைங்க, வெளிநாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Royal enfield himalayan side view

இந்தியாவில் கிடைப்பதைப் போலவே வெளிநாடுகளிலும் இந்த பைக்கிற்கு நல்ல வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஹிமாலயனை தழுவி உருவாக்கப்பட்ட டூயல் பயன்பாட்டு வசதிக் கொண்ட ஸ்க்ரம் 411 பைக்கை மாடலை ராயல் என்பீல்டு விற்பனைக்குக் களமிறக்கியது. இது ஓர் அட்வென்சர் டூரர் ரக பைக் மாடலாகும்.

2022 மார்ச் மாதத்திலேயே இதனை ராயல் என்பீல்டு விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்த ரகத்திற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே ஹிமாலயன் 411 மாடலை மட்டும் சந்தையில் இருந்து வெளியேற்ற இருப்பதாக ராயல் என்பீல்டு அறிவித்து இருக்கின்றது.

ஆனால், ஸ்க்ரம் 411 தொடர்ந்து விற்பனையில் இருக்கும். இந்த பைக் தற்போது இந்தியாவில் ரூ. 2.06 லட்சம் தொடங்கி ரூ. 2.12 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹிமாலயன் 411 இதைவிட சற்று காஸ்ட்லியான பைக் மாடலாகும்.

இதன் விலை ரூ. 2.16 லட்சம் தொடங்கி ரூ. 2.28 லட்சம் வரையிலான விலையைக் கொண்டிருக்கின்றது. இதைவிட மிக அதிக விலையைக் கொண்டதாகவே புதிய ஹிமாலயன் 450 விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. பன்முக சிறப்பு வசதிகளைத் தாங்கிய வாகனமாகவும், பவர்ஃபுல் மோட்டாரைக்கொண்டதாகவும் இதனை உருவாக்கி இருப்பதாலேயே அது அதிக விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ. 2.50 லட்சம் தொடங்கி ரூ. 2.45 லட்சம் வரையிலான விலையில் இந்த பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், எடையிலும், உயரத்திலும் ஹிமாலயனைவிட சற்று குறைவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், அதிக நீளம் கொண்டதாக அது இருக்கும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 10 மிமீ ஆகும்.

ஆகையால், நீர் நிறைந்த சாலைகளைகூட இந்த பைக் அசால்டு செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, இந்தியாவின் கரடு-முரடான சாலையை சமாளிக்கும் விதமாக பைக்கின் பின் பக்கத்தில் மோனோஷாக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. முன் பக்கத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கில் 17 லிட்டர் வரை பெட்ரோலை நிரப்பிக் கொள்ள முடியும்.

இதற்கேற்ப பெரிய அளவு ஃப்யூவல் டேங்க் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும் டயர்களும் அகலமானதாகவே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. சிறப்பம்சங்களைப் பொருத்த வரை சில அம்சங்கள் ஹிமாலயன் 411 இல் இருப்பவை அப்படியே புதிய ஹிமாலயன் 450லும் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில், வட்ட வடிவ டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ரைடு -பை -ஒயர் த்ரோட்டில், இரண்டு விதமான ரைடிங் மோட்கள், எல்இடி லைட்டுகள் மற்றும் ஸ்பிளிட் வகை இருக்கைகள் உள்ளிட்டவற்றையும் இந்த பைக்கில் காண முடியும். அதேவேளையில், இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் இந்த இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டிக் கொண்டிருக்கும் மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக ஹிமாலயன் 450 இருக்கின்றது. இந்தியாவில் இந்த பைக்கை மட்டுமில்லைங்க இன்னும் சில மாடல்களையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த நிலையிலேயே சில மாடல்களை வெளியேற்றம் செய்யும் பணியிலும் அது களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, November 3, 2023, 19:57 [IST]
English summary
Royal enfield himalayan 411 to be discontinue soon from india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+