ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்குல இவ்வளவு அம்சங்கள் இருக்குதா? இது தெரியாம போச்சே!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹிமாலயன் 450 என்ற புதிய பைக்கை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விற்பனையாகி வந்த ஹிமாலயன் 411 என்ற பைக்குக்கு மாற்றாக இந்த பைக் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய இன்ஜின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இந்த பைக் இடம் பெற்றுள்ளன.
இந்த பைக் குறித்த அதிகாரப்பூர்வ தொடர்புகள் எல்லாம் வெளியாகி உள்ள நிலையில் மக்கள் மத்தியில் இந்த பைக்கை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இந்த பைக் குறித்து பலர் ஆர்வமாக தேடி வருகின்றனர். அவர்களுக்கு விருந்து வைக்கும் விலை வகையில் நாங்கள் இந்த தகவல்களை எல்லாம் ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளோம் அந்த வீடியோவை கீழே காணலாம்.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கை பொறுத்தவரை 451 சிசி திறன் கொண்ட லிக்யூட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதன்முறையாக இந்த லிக்யூட் கூல்டு இன்ஜினை ஒரு வாகனத்தில் பொருத்தியுள்ளது என்றால் அது இந்த ஹிமாலயன் 450 பைக் தான். இந்த இன்ஜின் 40 பிஎஸ் பவரையும் 40 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுபோக இந்த பைக்கில் முதன்முறையாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் டிஎஃப்டி டிஸ்ப்ளே உடன் கூடிய ஸ்மார்ட் போன் இணைக்கும் வகையில் அம்சங்களை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை வழங்கியுள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இந்த சிஸ்டம் மிகவும் புதுமையானது தான். இது ராயல் என்ஃபீல்ட் ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








