இந்தியாவே தவம் கிடக்கும் ராயல் என்பீல்டு பைக்கின் டெலிவரி ஆரம்பிக்க போகுது! விலை இவ்ளோதானா! சாரே கொல மாஸ்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) பைக் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப விலை (Price) வெறும் 2.69 லட்ச ரூபாய் மட்டுமே.
அதே நேரத்தில் இதன் டாப் மாடலின் விலை 2.84 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அவை காஸா ப்ரவுன் (Kaza Brown), ஸ்லேட் ஹிமாலயன் 450 சால்ட் (Salte Himalayan 450 Salt), ஸ்லேட் பாப்பி ப்ளூ (Slate Poppy Blue), ஹேண்லி ப்ளாக் (Hanle Black) மற்றும் காமெட் ஒயிட் (Kamet White) ஆகியவை ஆகும்.
செயல்திறனை பொறுத்தவரையில், புத்தம் புதிய 452 சிசி இன்ஜின் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 40 பிஎஸ் பவர் மற்றும் 40 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் வசதிகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 411 (Royal Enfield Himalayan 411) பைக் உடன் ஒப்பிடும்போது, ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் நீளமானது மற்றும் அகலமானது. அத்துடன் க்ரவுண்ட் க்ளியரன்சும் 10 மிமீ அதிகம் ஆகும்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 230 மிமீ ஆக இருக்கிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கிற்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ஹிமாலயன் 450 பைக்கை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
இதை தொடர்ந்து இந்த பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் டீலர்ஷிப் வட்டாரங்களில் விசாரித்தபோது இந்த தகவல் கிடைத்துள்ளது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கிற்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் (BMW G310 GS) மற்றும் கேடிஎம் 390 அட்வென்ஜர் எக்ஸ் (KTM 390 Adventure X) ஆகிய பைக்குகளுக்கு போட்டியாகவே ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 டெலிவரி தொடங்கிய பிறகு, இந்த பைக்குகளின் விற்பனையில் அது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








