இந்தியாவே தவம் கிடக்கும் ராயல் என்பீல்டு பைக் நாளை அறிமுகம்! இதுதான் விலையா! கலக்கத்தில் போட்டி நிறுவனங்கள்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450). இந்த பைக்கிற்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து இந்த பைக்கின் விலை (Price) எவ்வளவு? என்பது நாளை (நவம்பர் 24) அறிவிக்கப்படவுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் ஆரம்ப விலை அனேகமாக 2.50 லட்ச ரூபாய் அல்லது 2.60 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Royal Enfield Himalayan 450

செயல்திறனை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கில், புதிய 450 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. அதிகபட்சமாக 40 பிஹெச்பி பவர் மற்றும் 40 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

அத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் அஸிஸ்ட் கிளட்ச் ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்படவுள்ளன. அதே நேரத்தில் இந்த பைக்கின் எடை 196 கிலோ என்ற அளவில் இருக்கும். இதுதவிர ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் இன்னும் பல்வேறு அதிநவீன வசதிகளும் (Features) கொடுக்கப்படவுள்ளன.

Royal Enfield Himalayan 450 Side Design

இதில் முழு எல்இடி லைட்டிங், ரைடு பை ஒயர், ஸ்விட்சபிள் ஏபிஎஸ், நேவிகேஷன் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய பெரிய மற்றும் வட்ட வடிவிலான டிஎஃப்டி திரை போன்றவை குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். இந்திய சந்தையில் கேடிஎம் 390 அட்வென்ஜர் (KTM 390 Adventure) பைக்கிற்கு போட்டியாக, ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 இருக்கும்.

இதுதவிர பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (BMW G 310 GS), யெஸ்டி அட்வென்சர் (Yezdi Adventure) மற்றும் ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் (Triumph Scrambler 400 X) ஆகிய பைக்குகள் உடனும், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் போட்டியிடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

பிரேக்கிங்கை பொறுத்தவரையில் இந்த பைக்கின் முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 17 லிட்டர்கள் ஆகும். இந்த பைக்கின் முன் பகுதியில் 21 இன்ச் வீல்களும், பின் பகுதியில் 17 இன்ச் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நீங்கள் அடிக்கடி சாகச பயணங்களை மேற்கொள்ள கூடியவரா? அப்படி என்றால், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். விலை நிர்ணயம் சரியாக செய்யப்பட்டால், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்ற பைக்குகளை போலவே, ஹிமாலயன் 450 பைக்கும் விற்பனையில் சாதனை படைக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 23, 2023, 23:05 [IST]
English summary
Royal enfield himalayan 450 launch tomorrow all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+