ராயல் என்பீல்டு களமிறக்கிய புதிய பைக்கின் விலை இவ்ளோதானா! சூட்டோட சூட்டா புக்கிங் பண்ணீர வேண்டியதுதான்!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) பைக் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய பைக் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

கலர் ஆப்ஷன்கள் (Colour Options): ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். அவை காஸா ப்ரவுன், ஸ்லேட் ஹிமாலயன் 450 சால்ட், ஸ்லேட் பாப்பி ப்ளூ, ஹேண்லி ப்ளாக் மற்றும் காமெட் ஒயிட் ஆகியவை ஆகும்.

Royal Enfield Himalayan 450

வசதிகள் (Features): ரைடு-பை-ஒயர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உடன் கூடிய 4 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்விச்சபிள் ரியர் ஏபிஎஸ், ரைடு மோடுகள் (ஈக்கோ, பெர்ஃபார்மென்ஸ்) ஆகியவை புத்தம் புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் முக்கியமான வசதிகள் ஆகும்.

இதுதவிர முழு எல்இடி லைட்டிங், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான முன் இருக்கை போன்றவையும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன. அதே நேரத்தில் இந்த பைக்கில் 17 லிட்டர் கொள்ளவு கொண்ட பெட்ரோல் (Petrol) டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

Royal Enfield Himalayan 450 Action Shot

பிரேக் (Brake), டயர்கள் (Tyres): பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. டயர்களை பொறுத்தவரையில், முன் பகுதியில் 21 இன்ச் டயர்களும், பின் பகுதியில் 17 இன்ச் டயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்ஜின் (Engine): ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கில், 450 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 8 ஆயிரம் ஆர்பிஎம்மில் 40 பிஹெச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 40 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

வேரியண்ட்கள் (Variants) மற்றும் விலை (Price): பேஸ் (Base) வேரியண்ட் விலை 2.69 லட்ச ரூபாய் ஆகவும், பாஸ் (Pass) வேரியண்ட் விலை 2.74 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் சம்மிட் (Summit) வேரியண்ட்டின் காமெட் ஒயிட் கலர் ஆப்ஷனின் விலை 2.79 லட்ச ரூபாய் ஆகவும், ஹேண்லி ப்ளாக் கலர் ஆப்ஷனின் விலை 2.84 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பதுடன், அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதாவது வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே, ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் இந்த விலையில் விற்பனை செய்யப்படும். அதற்கு பிறகு விலை உயர்த்தப்பட்டு விடும்.

போட்டியாளர்கள் (Rivals): இந்திய சந்தையில் கேடிஎம் 390 அட்வென்ஜர் (KTM 390 Adventure), பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (BMW G 310 GS) மற்றும் யெஸ்டி அட்வென்ஜர் (Yezdi Adventure) ஆகிய பைக்குள் உடன், புத்தம் புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் போட்டியிடும்.

முன்பதிவு (Bookings): ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கிற்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, புத்தம் புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கை புக்கிங் செய்து கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அடிக்கடி சாகச பயணங்களை மேற்கொள்ள கூடிய நபர்களுக்கு, ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் ஏற்றதாக இருக்கும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்ற பைக்குகளை போலவே, ஹிமாலயன் 450 பைக்கும் விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 25, 2023, 14:19 [IST]
English summary
Royal enfield himalayan 450 launched top 7 things
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+