இவ்ளோ கம்மியான விலையில் இப்படி ஒரு ராயல் என்பீல்டு பைக்கா! ஜெயிலர் வசூலை எல்லாம் இந்த நியூஸ் ஓரங்கட்டிருச்சு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan). இது அட்வென்ஜர் டூரர் (Adventure Tourer) ரகத்தை சேர்ந்த பைக் ஆகும். எனவே சாகச பயணங்களை மேற்கொள்பவர்கள் மத்தியில், ராயல் என்பீல்டு ஹிமாலயன் மிகவும் பிரபலமாக திகழ்கிறது.

ஆனால் எடை மற்றும் சக்தி குறைவான இன்ஜின் ஆகியவை, ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் 2 முக்கியமான பிரச்னைகளாக கருதப்படுகின்றன. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது 411 சிசி ஆயில் கூல்டு இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக சுமார் 25 பிஹெச்பி பவர் மற்றும் 32 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

Royal Enfield Himalayan 450 Teaser

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைக்காட்டிலும் சக்தி வாய்ந்த இன்ஜின் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். அதனை பூர்த்தி செய்யும் வகையில், ஹிமாலயன் 450 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் (Royal Enfield Himalayan 450) மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் அதிகாரப்பூர்வ டீசர் (Teaser) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Royal Enfield Himalayan 450 Teased

தற்போது 411 சிசி இன்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலுக்கு மேலாக, ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 நிலைநிறுத்தப்படவுள்ளது. இந்த பைக்கில் புதிய 450 சிசி இன்ஜினை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கவுள்ளது. இது சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் என்றாலும் கூட, லிக்யூட் கூல்டு இன்ஜினாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

சொல்லப்போனால் இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரிக்கும் முதல் லிக்யூட் கூல்டு இன்ஜின் ஆகும். இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் எவ்வளவு? என்பது அறிவிக்கப்படவில்லை. எனினும் இதன் பவர் அவுட்புட் 40-45 பிஹெச்பி ஆகவும், 40 என்எம் டார்க் ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 411 மாடலை விட, ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 411 பைக்கின் விலை (Price) 2.16 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே நேரத்தில் இதன் டாப் மாடலின் விலை 2.28 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இந்த சூழலில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் விலை 2.50 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, August 17, 2023, 17:34 [IST]
English summary
Royal enfield himalayan 450 official teaser expected price all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+