இணையத்தில் கசிந்த ஹிமாலயன் 450 பைக்கின் படங்கள்... இது எப்படி சாத்தியம்? இணையத்தை பரபரபாக்கிய சம்பவம்!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield) இந்தியாவில் வெகு விரைவில் புதுமுக மோட்டார்சைக்கிள் (Bike) சிலவற்றை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. போட்டி அதிகரித்துக் காணப்படுவதனால் நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள்களைக் களமிறக்கியே ஆக வேண்டும் என்கிற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது.
இந்த நிலையிலேயே அது வெகு விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகக் கூறப்படும் ஹிமாலயன் 450 (Himalayan 450) மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி (கசிந்து) உள்ளன. அட்வென்சர் இருசக்கர வாகன பிரியர்களின் மனம் கவர்ந்த மோட்டார்சைக்கிளாக ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) இருக்கின்றது.

இதிலேயே 450 (Royal Enfield Himalayan 450) வெர்ஷனை இந்தியர்களுக்காக ராயல் என்பீல்டு தயார் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த இருசக்கர வாகனத்திற்கும் இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிக அமோகமா அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே அந்த மோட்டார்சைக்கிளின் புகைப்படங்கள் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளன.
இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது ஓரிரு மாதங்களில் இந்த பைக் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வரும்நிலையிலேயே தற்போது அந்த பைக்கின் படங்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனம் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் இந்த மோட்டார்சைக்கிளை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புகைப்படம் இந்த நிலையிலேயே மிகவும் தெளிவான ஹிமாலயன் 450 படங்கள் வெளியாகி உள்ளன. இதை பார்க்கும்போது தற்போது விற்பனையில் இருக்கும் ஹிமாலயனும், விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஹிமாலயன் 450-ம் ஒரே மாதிரியானதாக தோன்றுகின்றன. ஆனால், உண்மையில் ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு மாற்றங்களை இந்த பைக்கில் செய்து இருக்கின்றது.
குறிப்பாக, முன் புறத்தில் உயர்த்தப்பட்ட மட்குவார்டு புதிய வடிவமைப்பில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதை தற்போது வெளியாகி இருக்கும் படத்திலும் நம்மால் பார்க்க முடிகின்றது. இத்துடன், யுஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷனும் இந்த பைக்கில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இவையே தற்போது விற்பனையில் இருக்கும் ஹிமாலயனிடம் இருந்து புதிய ஹிமாலயனை வேறுபடுத்திக் காட்டுகின்றன.
இதுதவிர, புதிய ஹிமாலயனில் வழங்கப்பட்டு இருக்கும் விண்ட்ஷீல்டும் இப்போது விற்பனையில் இருக்கும் மாடலில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையிலேயே இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, வரவிருக்கும் புதிய ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளில் எல்இடி தர ஹெட்லைட் எதிர்பார்க்கப்படுகின்றது. ஹெட்லைட்டில் மட்டுமல்ல இன்டிகேட்டர் போன்றவற்றிலும் எல்இடி ரக லைட்டுகளே எதிர்பார்க்கப்படுகின்றன.
இத்துடன், இதன் உடல் கட்டமைப்பு விஷயத்திலும் ராயல் என்பீல்டு லேசான மாற்றங்களைச் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி இன்னும் கணிசமான மாற்றங்களுடனேயே விரைவில் புதிய ஹிமாலயன் 450 இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆகையால், தற்போது விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் சற்று மாறுபட்ட தோற்றத்தில் அது இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது.
இதுதவிர நவீன தொழில்நுட்ப வசதிகளாக இந்த பைக்கில் புத்தம் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மிக சிறந்த ஸ்விட்சிங் அனுபவத்தை வழங்கும் கியர்பாக்ஸ் மற்றும் கவர்ச்சிகரமான ஸ்பிளிட் ரக இருக்கை ஆகியவற்றையும் ஹிமாலயன் 450 கொண்டிருக்கும். இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் கேடிஎம் 390 அட்வென்சர் எக்ஸ், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மற்றும் பஜாஜ் டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 450 எக்ஸ் ஆகியவற்றிற்கு போட்டியாக அமையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் அடுத்தடுத்து என பலதரப்பட்ட மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. குறிப்பாக, வரும் 30ஆம் தேதி அது பெரிதும் எதிர்பாக்கப்படும் புல்லட் 350 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஹிமாலயன் 450 மாடலின் படங்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications








