ரோடு ஃபுல்லா இந்த பைக்கா தான் ஓட போகுது!! ராயல் என்பீல்டின் அடுத்த புதிய பைக் இப்படி தான் இருக்கும்!

ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) மோட்டார்சைக்கிளின் படங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக ராயல் என்பீல்டு தொழிற்சாலையில் இருந்து வெளியாகியுள்ளன. அவற்றையும், புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஒவ்வொரு 3 மாத இடைவெளியிலும் ஒரு பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டு, அதன்படி செயல்பட்டு வருகிறது. இந்த வரிசையில், இன்னும் சில நாட்களில் புதிய தலைமுறை புல்லட் 350 மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் ஹிமாலயன் 450 பைக் இந்த வருடத்திற்கு உள்ளாக உலகளவில் வெளியீடு செய்யப்பட உள்ளது.

royal enfield himalayan 450 spotted

இந்த நிலையில், புதிய ஹிமாலயன் 450 பைக்கின் படங்கள் ராயல் என்பீல்டின் தொழிற்சாலையில் இருந்து வெளியாகியுள்ளன. இந்த ஸ்பை படங்களின் மூலம் பார்க்கும்போது, ராயல் என்பீல்டின் முழு-அட்வென்ச்சர் ரக பைக்காக உருவாக்கப்பட்டு உள்ள புதிய ஹிமாலயன் 450 பைக் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹிமாலயன் 411 பைக்கில் இருந்து சில பாகங்களை பெற்று உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

குறிப்பாக, ஹெட்லைட்டையும், பெட்ரோல் டேங்கையும் இணைக்கும் மெட்டல் ஃப்ரேம் தற்போதைய ஹிமாலயன் பைக்கில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது. இருப்பினும், புதிய பைக் என்பதை கூறும் விதமாக சில பாகங்கள் புத்தம் புதியவைகளாக உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ராயல் என்பீல்டின் இந்த புதிய அட்வென்ச்சர் பைக் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டு உள்ளது.

இவை எல்லாவற்றையும் விட முக்கிய அம்சமாக புதிய ஹிமாலயன் 450 பைக்கின் என்ஜின் விளங்கவுள்ளது. ஏனெனில் இந்த பைக்கில் புத்தம் புதிய 450சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 35-40 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.

royal enfield himalayan 450 spotted

இதே 450சிசி என்ஜினை எதிர்காலத்தில் மேலும் 5 மோட்டார்சைக்கிள்களுக்கு வழங்க ராயல் என்பீல்டு திட்டமிட்டு உள்ளது. சஸ்பென்ஷனுக்கு பைக்கின் முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங் பணியை கவனித்துக் கொள்ள முன் & பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. அத்துடன் ஏபிஎஸ் தொழிற்நுட்பமும் நிச்சயமாக வழங்கப்படும்.

அட்வென்ச்சர் பைக் என்பதால் புதிய ஹிமாலயன் 450-இன் முன் சக்கரம் 21 இன்ச்சிலும், பின் சக்கரம் 17 இன்ச்சிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த சக்கரங்களில் ஆஃப்-ரோடு டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளதை தற்போது வெளியாகியுள்ள படங்களில் பார்க்க முடிகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு நிறுவனம் வருகிற நவம்பர் 1ஆம் தேதி உலகளவில் வெளியீடு செய்ய உள்ளது.

அதனை தொடர்ந்து சில வாரங்களில், இந்திய சந்தையிலும் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.2.5 லட்சம் என்ற அளவில் எதிர்பார்க்கிறோம். சந்தையில் விற்பனையில் இந்த பைக்கிற்கு கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் திட்டங்களை திட்டமிட்டப்படி அடுத்தடுத்ததாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி, ராயல் என்பீல்டு பிராண்டில் இருந்து அடுத்ததாக வெளிவரும் ஹிமாலயன் 450 பைக் அட்வென்ச்சர் பைக்குகள் பிரிவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. அதேநேரம் தற்போதைய ஹிமாலயன் 411 பைக்கும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 30, 2023, 20:15 [IST]
English summary
Royal enfield himalayan 450 spotted inside factory
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+