லடாக் டிரிப் போக இதான்டா சரியான பைக், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் வீடியோ ரிவியூ!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அட்வெஞ்சர் டூரிங் செக்மெண்டில் தற்போது புதிதாக ஹிமாலயன் 450 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வந்த ஹிமாலயன் 411 என்ற பைக்கை நிறுத்திவிட்டு இந்த புதிய 450 சிசி இன்ஜின் கொண்ட பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் வெளியாவது குறித்து அறிவிப்பு வந்தது முதல் ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் இந்த பைக்கை வாங்க ஆர்வமாக காத்திருந்தார்கள்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த பைக்கை அறிமுகப்படுத்திய பின்பு டிரைவ்ஸ்பார்க் குழுவை இந்த பைக்கை ஓட்டி பார்க்க அழைத்திருந்தது. அதன் பெயரில் எங்கள் குழுவும் இந்த பைக்கை ஓட்டி பார்க்க சென்றோம். எங்களது ரைடிங் அனுபவத்தையும் இந்த பைக்கை ஓட்டி பார்க்கும்போது நாங்கள் உணர்ந்த விஷயங்களையும் வீடியோவாக நாங்கள் பதிவு செய்துள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 452 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சமாக இந்த பைக்கில் இருந்து வெளியாகும் சத்தம் தான் இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனமே பைக்கில் இருந்து வெளியாகும் சத்தத்திற்கு தான் பெயர் பெற்றது. இந்த பைக்கின் சத்தமும் சிறப்பாக இருக்கிறது. இந்த பைக்கின் பவரை பொறுத்தவரை 40பிஎச்பி பவரையும் 40என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த பைக்கை ஆஃப் ரோடு விரும்பிகள் பலர் விரும்பி வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆப் ரோடு அம்சங்கள் நிறைந்ததாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்குக்கு போட்டியாக மார்க்கெட்டில் டிரையம்ப் ஸ்கிரம்லர் 400, கேடிஎம் 390 அட்வெஞ்சர், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் ஆகிய பைக்குகள் இருக்கிறது. இந்த பைக் கொடுத்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








