இப்படியொரு ராயல் என்பீல்டு பைக்கை பார்த்திருக்க மாட்டீங்க!! எல்லாவற்றிலும் புதுமை கொட்டிக் கிடக்குது!

ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 (Royal Enfield Himalayan 452) மோட்டார்சைக்கிள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த புதிய ஹிமாலயன் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனம் புது, புது தயாரிப்புகளை களமிறக்குவதில் கடந்த சில வருடங்களாக தீவிரமாக உள்ளது. இந்த வரிசையில், பலரது கவனத்தை ஈர்த்துள்ள புத்தம் புதிய ஹிமாலயன் 452 மோட்டார்சைக்கிள் அடுத்ததாக விற்பனைக்கு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்காக புதிய 452சிசி என்ஜின்-சார்ந்த பிளாட்ஃபாரத்தை ராயல் என்பீல்டு உருவாக்கியுள்ளது.

royal enfield himalayan 452 features

இந்த புதிய பிளாட்ஃபாரத்தில் எதிர்காலத்தில் பல்வேறு புதிய தயாரிப்புகளை உருவாக்க ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. இதில் முதலாவதாக வெளிவருவதுதான் ஹிமாலயன் 452 ஆகும். புதிய ஹிமாலயன் 452 மோட்டார்சைக்கிள் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த மோட்டார்சைக்கிளின் உற்பத்தி பணிகளும் ராயல் என்பீல்டின் சென்னை தொழிற்சாலையில் துவங்கப்பட்டு உள்ளன.

புதிய ஹிமாலயன் 452 பைக்கின் முக்கிய சிறப்பம்சம் அதன் லிக்யுடு-கூல்டு ஷெர்பா 450 என்ஜின் ஆகும். இந்த வகையில் இந்த பைக்கில் பொருத்தப்படும் 452சிசி சிங்கிள்-சிலிண்டர் DOHC என்ஜின் அதிகப்பட்சமாக 40 பிஎச்பி மற்றும் 40 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் உடன் முதல்முறையாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்குகிறது.

royal enfield himalayan 452 features

அதேபோல், புதிய ஹிமாலயன் 452 மூலமாக சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை கொண்ட மோட்டார்சைக்கிளில் முதல்முறையாக முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளை ராயல் என்பீல்டு வழங்கியுள்ளது. புதிய ஹிமாலயன் 452 பைக் பல்வேறு அம்சங்களை ராயல் என்பீல்டு நிறுவனத்திலேயே முதல்முறையாக பெற்று வருகிறது. இந்த வரிசையில், புதிய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை இந்த பைக்கில் வழங்கப்பட உள்ளது.

ராயல் என்பீல்டு பைக் ஒன்றில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். மேலும், இந்த பைக்கின் பின்பக்கத்தில் ஆல்-எல்இடி விளக்குகளை ராயல் என்பீல்டு பொருத்தியுள்ளது. இந்த பைக்கின் டெயில்லைட்கள் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் இருப்பதை போன்று கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 21 இன்ச்சில் முன் சக்கரம், ஸ்போக் சக்கரங்கள், சியட்டின் க்னோபி ட்யூயல்-பர்பஸ் ட்யூப்லெஸ் டயர்கள் போன்ற ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற வசதிகளும் இந்த பைக்கில் கொட்டிக் கிடக்கின்றன.

royal enfield himalayan 452 features

அதுமட்டுமின்றி, பெரிய விண்ட்ஸ்க்ரீன், நிமிர்ந்த ஹேண்டில்பார், சவுகரியமான இருக்கை அமைப்பு மற்றும் டில்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை உள்ளிட்டவை இருப்பதால், ஹிமாலயன் 452 பைக்கை தொலைத்தூர பயணங்களுக்கும் பயன்படுத்த முடியும். இப்போதுவரையில், மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் ஹிமாலயன் 452 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் வெளிக்காட்டி உள்ளது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.2.5 லட்சம் - ரூ.2.7 லட்சத்தில் எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹண்டர் 350 பைக்கை போல, புதிய ஹிமாலயன் 452 ராயல் என்பீல்டின் முக்கியமான அறிமுகமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த பைக்கின் அறிமுகத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. ஏற்கனவே, ஹிமாலயன் 411 பைக் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த பைக் களமிறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 1, 2023, 22:35 [IST]
English summary
Royal enfield himalayan 452 bike important features engine suspension
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X