அடடே இந்த கலர் ஆப்ஷன் எல்லாம் இந்த பைக்குல கிடைக்க போகுதா! எல்லாமே இவ்ளோ பிரீமியமா இருந்தா எத தேர்வு செய்யறது!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக் பற்றிய பல்வேறு முக்கிய விபரங்கள் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றன. விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளநிலையில், அந்த பைக் பற்றிய முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இருசக்கர வாகன மாடல்களில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452-வும் ஒன்றாகும். இந்த மிக சிறந்த சிறப்பம்சங்கள், நவீன கால தொழில்நுட்ப வசதிகள் என நம்ப முடியாத பல்வேறு அம்சங்களுடன் இந்த பைக் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Royal enfield himalayan 452 color details

இந்த மாதிரியான சூழலிலேயே புதிய ஹிமாலயன் 452 பைக்கின் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்கள் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த தகவல் அந்த பைக்கின் பக்கம் வாடிக்யைாளர்களின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. மிக முக்கியமாக இந்த பைக்கில் எத்தனை விதமான நிற தேர்வுகள், என்னென்ன நிற தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன என்பது பற்றிய விபரம் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.

2023 ஹிமாலயன் 452 பைக்கில் ஐந்து விதமான நிற ஆப்ஷன் வழங்கப்பட இருக்கின்றன. இதுதவிர மூன்று விதமான வேரியண்டுகளின்கீழேயே இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. பேஸ் (Base), பாஸ் (Pass) மற்றும் சம்மிட் (Summit) ஆகியவையே அவை ஆகும். ஆரம்ப நிலை ட்ரிம்மாக பேஸ் இருக்கின்றது.

Himalayan 452

இதில், காஸா பிரவுன் (Kaza Brown) எனும் நிற தேர்வு வழங்கப்பட இருக்கின்றது. இதன் நடு நிலை தேர்வாக பாஸ் இருக்கின்றது. இந்த ட்ரிம்மில் ஸ்லேட் ஹிமாலயன் சால்ட் (Slate Himalayan Salt) மற்றும் ஸ்லேட் பாப்பி ப்ளூ (Slate Poppy Blue) எனும் இரட்டை நிற தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன.

மேலும், உயர் நிலை ட்ரிம்மான சம்மிட்-டிலும் இரண்டு விதமான வண்ண ஆப்ஷன் வழங்கப்பட இருக்கின்றன. ஹேன்லே பிளாக் (Hanle Black) மற்றும் கேமெட் ஒயிட் (Kamet White) ஆகியவையே ஆகும். இந்த பிரத்யேக நிறங்களானது பைக்கை அலங்கரிக்கும் வகையில் ஃப்யூவல் டேங்கின் மேற் பகுதி மற்றும் அடி பகுதி வழங்கப்பட்டு இருக்கும்.

Royal enfield himalayan 452 side view

இதுதவிர வீல், முன்பக்க மட்குவார்டு, சைடு கேஸ் உள்ளிட்டவற்றிலும் அந்த நிறம் வழங்கப்பட்டு இருக்கும். இந்த நிற அலங்கரிப்பு யுக்தியானது புதிய ஹிமாலயன் 452 பைக்கிற்கு ஓர் முரடனைப் போன்ற தோற்றத்தை வழங்கும் வகையில் இறுக்கின்றது. மேலும், மற்ற ஹிமாலயனிடம் இருந்து இதனை மாறுபட்டுக் காட்சியளிக்கச் செய்கின்றது.

இந்த தோற்றத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக இரட்டை துண்டு அமைப்புடைய இருக்கை, பின் பக்கத்தில் லக்கேஜிற்கான கேரியர், உயரமான ஹேண்டில் பார், பெரிய விண்ட் ஸ்கிரீன், ப்யூவல் டேங்க் குவார்டு, இரட்டை மட்டுகுவார்டு அமைப்பு ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ஸ்போக் அலாய் வீலே இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

Royal enfield himalayan 452 running shot

இது தவிர, இந்த பைக்கில் முழு டிஜிட்டல் திறன் கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கூகுள் மேப், எல்இடி லைட், லாங் டிராவலுக்கு ஏற்ற யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் ஆகியவை புதிய ஹிமாலயன் 452 பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்ஜினைப் பொருத்த வரை 451.65 சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 40 பிஎச்பி பவரையும், 40 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என கூறப்படுகின்றது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் வழங்கப்பட இருக்கின்றது. இத்துடன் மிக சுலபமான ஷிஃப்டிங் அனுபவத்தை வழங்கும் விதமாக ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதிகள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், தடையில்லா டிராவலை உறுதி செய்யும் விதமாக இந்த பைக்கில் ட்யூப் லெஸ் (Tube Less Tyre) டயர் மற்றும் ஸ்போக் வீல் (Spoked Wheels)களும் வழங்கப்பட இருக்கின்றன. புதிய ஹிமாலயன் 452இன் ஒட்டுமொத்த எடையே வெறும் 196 கிலோ மட்டுமே என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இது ஹிமாலயன் 411 மாடலைக் காட்டிலும் 3 கிலோ வரை குறைவான எடை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக் நீண்ட தூர டிராவலுக்கு ஏற்ற வாகனமாகும். ஆகையால், புதிய ஹிமாலயன் 452க்கு லாங் டிராவல் மற்றும் அட்வென்சர் பயணம் மேற்கொள்வோர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால், இதற்கு எனன மாதிரியான வரவேற்புக் கிடைக்கும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 2, 2023, 5:00 [IST]
English summary
Royal enfield himalayan 452 color option details revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X