இந்தியாவே காத்து கிடக்கும் ராயல் என்பீல்டு பைக்கின் விலை இவ்ளோதானா! இந்த தீபாவளியை ஆயுசுக்கும் மறக்க முடியாது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 (Royal Enfield Himalayan 452). இந்த புதிய பைக்கிற்காக காத்து கொண்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கின் இந்திய அறிமுக தேதி (Launch Date) குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக், வரும் நவம்பர் 7ம் தேதி விற்பனைக்கு களமிறங்கவுள்ளது. இதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

Royal Enfield Himalayan 452

தற்போது விற்பனையில் உள்ள ராயல் என்பீல்டு ஹிமாலயன் 411 (Royal Enfield Himalayan 411) பைக்கிற்கு மேலாக, இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்படவுள்ளது. ஏனெனில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கானது, பிரீமியமான மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த மாடல் ஆகும்.

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் (BMW G310 GS), ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (Triumph Scrambler 400X) மற்றும் கேடிஎம் 390 அட்வென்ஜர் எக்ஸ் (KTM 390 Adventure X) ஆகிய பைக்குகளுக்கு எதிராக, ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Royal Enfield Himalayan 452 Side Design

அனேகமாக இந்த புதிய பைக்கின் விலை (Price) 2.70 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கின் விலை எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்த பைக்கில், புத்தம் புதிய 452 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூல்டு ஃப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினின் பவர் அவுட் அனேகமாக 40 பிஹெச்பி மற்றும் 40-45 என்எம் டார்க் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஸ்பிளிட் இருக்கைகள், ஸ்பிளிட் க்ராப் ரெயில்கள், முன் மற்றும் பின் பகுதியில் டிஸ்க் பிரேக்குகள், ட்யூயல் சேனல் ஏபிஎஸ், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் நேவிகேஷன் வசதியுடன் கூடிய புத்தம் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கில் இடம்பெற்றிருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நீங்கள் அடிக்கடி பைக் சாகச பயணங்களை மேற்கொள்பவர் என்றால், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 உங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய அட்வென்ஜர் டூரர் ரக பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கை பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 10, 2023, 23:49 [IST]
English summary
Royal enfield himalayan 452 launch date november 7 all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+