கொல மாஸ்! சிங்கத்தின் உற்பத்தியை தொடங்கியது ராயல் என்பீல்டு! இவ்ளோ கம்மியான விலையில் விற்பனைக்கு வரப்போகுதா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 (Royal Enfield Himalayan 452). அட்வென்ஜர் டூரர் (Adventure Tourer) ரகத்தை சேர்ந்த இந்த பைக் வரும் நவம்பர் 7ம் தேதி (November 7) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதற்கு முன்னதாக ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கின் உற்பத்தி (Production) பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. எனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே, ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கில் புத்தம் புதிய 451.65 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 40 பிஹெச்பி பவர் மற்றும் 40-45 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.
இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம். ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கின் எடை 196 கிலோ என்ற அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், முன் பகுதியில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் மோனோஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டிருக்கலாம்.

இதுதவிர முன் பகுதியில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் 2 பீஸ் சீட் ஆகிய அம்சங்களும், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கில் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் யெஸ்டி அட்வென்ஜர் (Yezdi Adventure) மற்றும் கேடிஎம் 390 அட்வென்ஜர் எக்ஸ் (KTM 390 Adventure X) ஆகிய பைக்குகளுடன், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 போட்டியிடும்.
இதுதவிர பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (BMW G 310 GS) மற்றும் ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (Triumph Scrambler 400X) பைக்கிற்கும் இது போட்டியாக இருக்கும். பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கின் விலை (Price) 2.70 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளான நவம்பர் 7ம் தேதிதான், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 பைக்கின் விலை அதிகாரப்பூர்வமான முறையில் அறிவிக்கப்படும். அதுவரை நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அடிக்கடி பைக் சாகச பயணம் மேற்கொள்பவர்களுக்கு, ராயல் என்பீல்டு ஹிமாலயன் 452 மிகவும் ஏற்றதாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் 452 பைக்கை தொடர்ந்து, இந்திய சந்தையில் நிறைய 650 சிசி பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே ராயல் என்பீல்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்கனவே நிறைய 650 சிசி பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








