ஹிமாலயன் பைக்குல இப்படி ஒரு சிக்கலா?.. திருப்பி கொண்டு போகாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்துதான்!
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் தயாரிக்கும் முன்னணி இருசக்கர வாகன மாடல்களில் ஹிமாலயன் (Himalayan)-ம் ஒன்று. இது ஓர் ஆஃப்-ரோடு மற்றும் அட்வென்சர் பயணத்திற்கு உகந்த வாகனம் ஆகும். ஆகையால், இந்த மாதிரியான பயணங்களை மேற்கொள்வோர் மத்தியில் இந்த வாகனத்திற்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த மாடலை சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. அந்தவகையில், அமெரிக்கா சந்தையிலும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் விற்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் மற்றும் பிற உலக நாடுகளில் கிடைப்பதைப் போலவே இந்த நாட்டிலும் ஹிமாலயனுக்கு கணிசமான அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் அமெரிக்க சந்தையில் ஹிமாலயன் பைக்கை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு பெருத்த ஆபத்து காத்துக் கொண்டிருப்பதாக தற்போது அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளையில், இந்த ஆபத்தைக் களையும் பணியும் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது களமிறங்கி இருக்கின்றது.
அதாவது, ஹிமாலயனில் இருக்கும் ஆபத்தான கோளாறுகளை சரி செய்வதற்காக அந்த பைக்குகளை தங்களிடம் திருப்பிக் கொண்டு வருமாறு நிறுவனம் அழைப்பு விடுத்து உள்ளது. குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட ஹிமாலயன் பைக்குகளிலேயே சிக்கல்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஆகையால், அந்த வாகனங்களுக்கு மட்டுமே இந்த திருப்பி அழைத்தல் பொருந்தும்.

2017 மார்ச் 1 தொடங்கி 2021 பிப்ரவரி 28 வரையில் தயாரிக்கப்பட்ட ஹிமாலயன் பைக்குகளுக்கே நிறுவனம் அழைப்பு விடுத்திருக்கின்றது. இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட 4,891 யூனிட்டுகள் ஹிமாலயன் பைக்குகள் அமெரிக்காவில் விற்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றிற்கே நிறுவனத்தின் அழைப்பு பொருந்தும்.
பிரேக் காலிபர்களில் பிரச்னை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. இதை சரி செய்யும் பொருட்டே நிறுவனம் ஹிமாலயனை அழைத்து உள்ளது. அமெரிக்காவின் சாலைகளில் பொழியும் பனியை சமாளிக்கும் பொருட்டு உப்புகள் தெளிக்கப்படும். இந்த உப்பே ஹிமாலயன் பைக்கில் உள்ள காலிபர்களை பதம் பார்த்திருக்கின்றன.

பிரேக் பிடிக்காமல் போகுதல், பிரேக் பிடிக்கும்போது அதிக சத்தத்தை வெளியற்றுதல், சில நேரங்களில் எரிந்த வாசத்தை வெளியேற்றுதல் என பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதனைக் காரணம் காட்டியே அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காணும் விதமாக ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயனை திரும்பி அழைக்கத் தொடங்கி இருக்கின்றது.
இந்த திரும்பி அழைத்தல் அமெரிக்காவிற்கு மட்டுமே பொருந்தும் என்பது கவனிக்கத்தகுந்தது. தமிழகத்திற்கோ, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கோ இந்த ரீ-கால் பொருந்தாது. கடந்த காலங்களிலும் இதேபோல் பிரிட்டன், தென் கொரியா மற்றும் ஐரோப்பியா போன்ற நாடுகளில் இதேமாதிரியான காலிபர் அரிப்பு பிரச்னைக்காக ராயல் என்பீல்டு டூ-வீலர்கள் திரும்பி அழைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

15 ஆயிரத்திற்கும் அதிகமான ஹிமாலயன் மற்றும் 650 ட்வின் பைக்குகள் இதே பிரச்னைக்காக அழைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே அமெரிக்காவில் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது. வாகன ஓட்டிகள் இதுமாதிரியான கெமிக்கல் அரிப்பில் இருந்து தங்களது வாகனங்களின் முக்கிய பாகங்களை பாதுகாக்க அரிப்புகளை தவிர்க்கும் ஸ்பிரேக்களை பயன்படுத்தலாம்.
அது அரிப்பில் இருந்து அப்பாகத்தை காப்பாற்றுவது மட்டுமின்றி அதன் ஆயுட்காலத்தையும் நீட்டிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், பெரும்பாலானோர் இதை செய்ய தவறுகின்றனர். இதன் விளைவாக விரைந்து ஆயுட்காலத்தை இழத்தல் அல்லது சேதமடைதல் போன்றவற்றிற்கு முக்கிய பாகங்கள் ஆளாகின்றன. ஹிமாலயன் இந்திய சந்தையிர் ரூ. 1.83 லட்சம் தொடங்கி ரூ. 2.24 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.
மேலே பார்த்தது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கில் ராயல் என்பீல்டு நிறுவனம் 411சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு, எஸ்ஓஎச்சி (SOHC) எஞ்ஜினை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 24.3 பிஎச்பி மற்றும் 32 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications









