என்னங்க பெரிய ஹார்லி-டேவிட்சன்... நம்ம ஊர் ராயல் என்பீல்டின் அடுத்த புதிய பைக் இதுதான் - கூட்டம் குவிய போகுது!

விற்பனையில் சக்கை போடு போட்டுவரும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) பைக்கின் 450சிசி வெர்சன், அதாவது ஹண்டர் 450 பைக்கின் அறிமுகம் குறித்த புதியதொரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம் வாங்க.

இந்தியா மட்டுமின்றி, உலகளவில் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் பிரபலமாக விளங்கும் நிறுவனம் ராயல் என்பீல்டு என்றால் அதில் மாற்று கருத்து இல்லை. இதனாலேயே இந்தியர்களை மட்டுமின்றி, மற்ற வெளிநாட்டினரையும், அவர்களது இரசனைகளையும் மனதில் வைத்து ராயல் என்பீல்டு தனது ஒவ்வொரு பைக்கையும் வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சூப்பர் மீட்டியோர் 650 அதில் ஒன்றாகும்.

royal enfield hunter 450 may be launch early 2024

இந்த 650சிசி பைக் மட்டுமின்றி, ராயல் என்பீல்டின் மற்ற இரு 650சிசி பைக்குகளும் கூட வெளிநாடுகளிலேயே அதிகம் விற்பனையாகுகின்றன. இதன் காரணமாகவே தனது புதிய பைக்குகளை அதிக சிசி-யில் உருவாக்க ராயல் என்பீல்டு முயற்சித்து வருகிறது. இந்த வகையில், ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கின் 450சிசி தயாராகி வருவதாக கடந்த பல மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், தற்போது ஹண்டர் 350 பைக்கின் 450சிசி வெர்சனையும் களமிறக்கும் திட்டத்தில் ராயல் என்பீல்டு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹண்டர் 350 பைக்கிற்கு ஏகோபித்த வரவேற்பு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட பைக்கில் 450சிசி வெர்சன் என்பது உண்மையில் நல்ல திட்டமாகும். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஹண்டர் 450 பைக் அடுத்த 2024ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம்.

royal enfield hunter 450 may be launch early 2024

ராயல் என்பீல்டின் 450சிசி பைக் என ஏகப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் பொது சாலைகளில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருவதை அவற்றின் ஸ்பை படங்களின் மூலமாக பார்த்து வருகிறோம். அவற்றுள் எது ஹண்டர் 450 என்பதை தற்போதைக்கு உறுதியாக கூற முடியவில்லை. எப்படியிருந்தாலும், ராயல் என்பீல்டின் முதல் 450சிசி பைக்காக ஹிமாலயன் 450 தான் அறிமுகமாகும். இதன் அறிமுகத்தை இந்த 2023ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக எதிர்பார்க்கிறோம்.

இதனை தொடர்ந்து ராயல் என்பீல்டின் நாக்டு 450சிசி பைக்காக ஹண்டர் 450 அடுத்த 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய ஹண்டர் 450 தற்போதைய ஹண்டர் 350 பைக்கை காட்டிலும் அளவில் பெரியதாக இருக்கும். ஆனால் ஹிமாலயன் 450 பைக்கை காட்டிலும் அளவில் சற்று சிறியதாகவே இருக்கும். குறிப்பாக, ரைடர் இருக்கையின் உயரம் ஹண்டர் 450-இல் ஹிமாலயன் 450-ஐ காட்டிலும் தாழ்வானதாக எதிர்பார்க்கிறோம்.

royal enfield hunter 450 may be launch early 2024

அலாய் சக்கரங்கள் அல்லது வயர்-ஸ்போக்டு சக்கரங்களுடன் ஹண்டர் 450 பைக்கை ராயல் என்பீல்டு விற்பனைக்கு கொண்டுவரலாம். பைக்கின் எடையை கருத்தில் கொண்டு, பைக்கில் அதிகளவில் பேனல்கள் வழங்கப்பட வாய்ப்பில்லை. ஹண்டர் 350 பைக்கின் அடையாளங்களுள் ஒன்று, அதன் பெரிய வட்ட வடிவிலான ஹெட்லைட் ஆகும். அது ஹண்டர் 450 பைக்கிலும் நிச்சயமாக தொடரப்படும் என தெரிகிறது. என்ஜினை ஹிமாலயன் 450-இல் வழங்குவதையே ஹண்டர் 450 பைக்கிலும் ராயல் என்பீல்டு வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் ஒவ்வொரு 3 மாத காலத்திற்கும் ஒரு புதியதொரு மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு கொண்டுவருவது என்கிற கொள்கை உடன் செயல்பட்டு வருகிறது. இந்த வரிசையில் வெளிவரும் ஹண்டர் 450 இந்தியாவில் வெற்றி பெறுமா என்பது தெரியவில்லை, ஆனால் பல வெளிநாடுகளில் வெற்றி பெறும் என்பது உறுதி. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி ஹண்டர் 450 அடுத்த 2024இன் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 29, 2023, 11:40 [IST]
English summary
Royal enfield hunter 450 may be launch early 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+