ராயல் என்ஃபீல்டு பைக்கை இப்படி யாருமே பார்த்திருக்க மாட்டீங்க!! பவர்-அவுட் வேற லெவல்ல கிடைக்கும்!

என்.எம்.டபிள்யூ பெர்ஃபார்மன்ஸ் ரேசிங் (NMW Performance Racing)-இன் பெங்களூர் கேரேஜில் ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 பைக் ஒன்று 865சிசி என்ஜினை கொண்ட பைக்காக மாற்றப்பட்டுள்ளது. பைக்கின் என்ஜினை கழற்றுவதற்கு முன்பாக என்னென்ன வேலைகளை செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே வீடியோவாக பதிவிட்டு இருந்தோம்.

அது முதல் பகுதி வீடியோ ஆகும். 2ஆம் பகுதி வீடியோவை கீழே காணலாம். இந்த வீடியோவில், என்ஜினின் போர் மற்றும் 90மிமீ பிஸ்டனை பொருத்துவதை காணலாம். மேலும், கழற்றப்பட்ட இண்டர்செப்டர் 650 பைக்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பொருத்தும் என்ஜின் மேல் பகுதியையும் தனியாக இந்த வீடியோவில் விரிவாக காட்டியுள்ளோம்.

இந்தியாவின் முன்னணி பைக் பார்ட்ஸ் உற்பத்தி & விநியோக நிறுவனமாக என்.எம்.டபிள்யூ ரேசிங் உள்ளது. குறிப்பாக, விலையுயர்ந்த செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிள்களுக்கான பாகங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்ததாக என்.எம்.டபிள்யூ ரேசிங் உள்ளது. சில வாரங்களுக்கு முன், கேடிஎம் பைக் ஒன்றின் சஸ்பென்ஷன் இந்த நிறுவனத்தின் பெங்களூர் கேரேஜில் மாற்றப்பட்டதை பார்த்திருந்தோம்.

royal enfield interceptor 650 converted

அந்த வரிசையில், தற்போது ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கின் என்ஜின் மெருக்கேற்றப்பட்டு உள்ளது. 865சிசி என்ஜினாக மாற்றப்பட்டுள்ளதால், கூடுதல் இயக்க ஆற்றல் கிடைக்கும் என்பது உறுதி. இண்டர்செப்டர் 650 பைக்கில் தற்சமயம் பொருத்தப்படுகின்ற 649சிசி ஏர்/ஆயில்-கூல்டு இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் 47 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 30, 2023, 19:20 [IST]
English summary
Royal enfield interceptor 865cc converted at nmw racing part 2 video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+