நாடே இதை தான் எதிர்பார்த்தது! கம்மிரேட்ல ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்க அவங்களே தனி கடைய திறந்துட்டாங்க!
செகண்ட் ஹேண்ட் பைக்குகளை வாங்கி வைக்கும் ரிஓன் என்ற நிறுவனத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக துவங்கி உள்ளது. தற்போது இந்த நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வாகன தயாரிப்பு நிறுவனங்களே செகண்ட் ஹேண்டில் வாகனங்களை வாங்கி விற்கும் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. மாருதி உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் இப்படியான செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனை நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதன்படி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது செகண்ட் ஹேண்டில் டூவீலர்களை வாங்கி விற்கும் நிறுவனமாக ரிஓன் என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளது.

இந்த நிறுவனம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தை விற்பனை செய்ய முயன்றால் இந்த நிறுவனத்தின் மூலம் விற்க முடியும். புதிதாக ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்க விருப்பம் இல்லாமல் செகண்ட் ஹேண்டில் வாங்க விரும்பும் வாடிக்கையாளரும் நேரடியாக இந்த நிறுவனத்தின் மூலம் தங்கள் விருப்பமான பைக்குகளை வாங்கிக் கொள்ள முடியும்.
முதல் கட்டமாக இந்த சேவை சென்னை, பெங்களூர், கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் துவங்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த ரிஓன் என்ற நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான தயாரிப்புகளை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டிலும் வழங்குவதற்காக இந்த நிறுவனத்தை துவக்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சுலபமாக ராயல் என்ஃபீல்டு பைக்குகளை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

இது குறித்து அந்த நிறுவனத்தின் சிஇஓ கோவிந்தராஜன் பேசும்போது: "ராயல் என்ஃபீல்டு பைக்கை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மை மற்றும் சுலபமாக வாகனங்களை பெரும் வசதிக்காக இந்த ரீஓன் என்ற புதிய முன்னெடுப்பை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.
இதன் மூலம் எங்களது ரீடெயில் நெட்வொர்க்கை விரிவு படுத்துகிறோம். மேலும் ராயல் என்ஃபீல்டு எக்கோ சிஸ்டம் மற்றும் ராயல் என்ஃபீல்டு பைக் கலெக்டர்கள், ஒர்க் ஷாப்புகள் ஆகியவற்றை இதன் மூலம் மேம்படுத்துகிறோம். வாடிக்கையாளர்களுக்கு தரமான கேரண்டியான வகையில் பைக்குகளை இதன் மூலம் விற்பனை செய்ய உள்ளோம்."என கூறினார்.

இந்த ரிஒன் பிராண்ட் மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய மார்க்கெட்டுக்குள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையிலும் எந்த பிரச்சனையும் அல்லாத ஆவண மாற்றங்களையும் செய்ய உதவி செய்கிறது. மேலும் புதிதாக ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்கும் பழைய வாடிக்கையாளர்களும் தங்கள் பழைய பைக்கை விற்றுவிட்டு புதிய பைக்கை வாங்குவதற்காக இந்த பிராண்ட் உதவி செய்கிறது.
இந்த ரீஓன் என்ற நிறுவனம் தற்போது ஆன்லைனிலும், கடைகள் மூலமாகவும் செயல்படத் துவங்கி உள்ளது. வாடிக்கையாளர்கள் சுலபமாக தங்கள் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை இதன் மூலம் விற்பனை செய்யலாம். இதற்கான தனிப்பட்ட மேனேஜர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் வாடிக்கையாளர்களின் வாகனங்களை விற்கவும் புதிய வாடிக்கையாளர்கள் வாகனங்களை வாங்கவும் உதவியாக இருப்பார்கள்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்யும் செகண்ட் ஹேண்ட் பைக்குகள் எல்லாம் 200க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் மெக்கானிக்கல் சோதனைகளை செய்து பழைய பைக்குகளை புதுப்பித்து அதன் உதிரி பாகங்களை ஒரிஜினல் உதிரி பாகங்களாக மாற்றி ராயல் என்ஃபீல்டு அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் சர்வீஸ் செய்யப்பட்டு மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த ரிஓன் பிராண்ட் மூலம் செகண்ட் ஹேண்டில் வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்கள் வாகனம் வாங்கிய பின்பு இரண்டு முறை இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு பைக்கை விற்பனை செய்துவிட்டு புதிய ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ராயல்டி போனஸாக ரூபாய் 5000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் செகண்ட் ஹேண்டில் வாகனங்களை விற்கும் போது அதற்கு பைனான்ஸ் ஆப்ஷன்களை வழங்க ஐடிஎப்சி, எச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் செகண்ட் ஹேண்ட் பைக்கையும் பைனான்ஸ் முறையில் இஎம்ஐ வசதியுடன் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்களே செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக தனியாக நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றனர். அதில் தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் இணைந்துள்ளது. இது மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









