இந்த ராயல் என்பீல்டு பைக் இன்னும் அழகாயிடுச்சு!! ஹெட்லைட்டிற்காகவே பைக்கை வாங்க கூட்டம் குவிய போகுது!
ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) மோட்டார்சைக்கிளுக்கு புதியதாக எல்இடி ஹெட்லைட் மற்றும் ஸ்போக்டு ரிம்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீட்டியோர் 350 பைக்கின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும், இந்த ராயல் என்பீல்டு பைக்கை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
தனது பைக்குகளில் அவ்வப்போது புதிய அப்டேட்களை கொண்டுவருவதில் முனைப்புடன் இருக்கும் பைக் நிறுவனம் ராயல் என்பீல்டு. புத்தம் புதிய ஹிமாலயன் 452 பைக்கை அறிமுகப்படுத்த தயாராகிவரும் ராயல் என்பீல்டு நிறுவனம் இதற்கு மத்தியில் அதன் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்துள்ளது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என கூறுவதை விட, இந்த பைக்கில் புதியதாக ஒரு வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வகையில், மீட்டியோர் 350 பைக்கில் 'அரோரா' (Aurora) என்ற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய வேரியண்ட்டின் மூலம் புதியதாக ரெட்ரோ பெயிண்ட் ஆப்ஷன்கள் மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது மட்டுமின்றி, எல்இடி ஹெட்லைட் மற்றும் ஸ்போக்டு சக்கரங்கள் போன்றவையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. புதிய அரோரா வேரியண்ட்டின் சிறப்பம்சமே அதன் ரெட்ரோ பெயிண்ட் ஆப்ஷன்கள் தான்.

ஏனெனில், புதிய மீட்டியோர் 350 அரோரா பைக்கை சுற்றிலும் க்ரோம் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன. என்ஜின் பகுதி மற்றும் ஹெட்லைட் நாசில் பகுதியில் கூட க்ரோம் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெரிய விண்ட்ஸ்க்ரீன், பின் இருக்கை பயணிகளுக்கு பேக் ரெஸ்ட் மற்றும் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்டவையும் இந்த பைக்கில் இடம் பெற்றுள்ளன.
பச்சை, நீலம் மற்றும் கருப்பு என்கிற 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த புதிய வேரியண்ட்டை வாங்கலாம். புதிய அரோரா வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2,19,900 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், புதிய அரோரா வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுடன், மீட்டியோர் 350 பைக்கின் மற்ற வேரியண்ட்களிலும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இதன்படி, மீட்டியோர் 350 பைக்கின் எண்ட்ரீ-லெவல் ஃபயர்பால் வேரியண்ட் புதியதாக கருப்பு நிற பெயிண்ட் ஆப்ஷனையும், ஸ்டெல்லார் வேரியண்ட் டிரிப்பர் நேவிகேஷன் பேட் அம்சத்தையும் பெற்றுள்ளன. மீட்டியோர் 350 பைக்கின் டாப் சூப்பர்நோவா வேரியண்ட்டிற்கு அலுமினியம் ஸ்விட்ச் க்யூப்ஸ் மற்றும் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்டவை புதியதாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த அப்டேட்களினினால், மீட்டியோர் 350 பைக்கின் வேரியண்ட்களின் விலைகள் ரூ.2,500இல் இருந்து ரூ.5,000 வரையில் வேரியண்ட்டை பொறுத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2,05,900-இல் இருந்து ரூ.2,29,900 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அப்டேட் செய்யப்பட்ட மீட்டியோர் 350 பைக்கிற்கான முன்பதிவுகள் இன்று (அக்டோபர் 11) முதல் அனைத்து ராயல் என்பீல்டு ஷோரூம்களிலும் துவங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக்கின் விற்பனையை அதிகரிக்க வேண்டுமெனில், இவ்வாறான புது புது அப்டேட்களை அவ்வப்போது கொண்டுவருவது அவசியமாகும். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், அப்டேட் செய்யப்பட்ட மீட்டியோர் 350 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை வெறும் ரூ.5,000 என்ற அளவில் மட்டுமே ராயல் என்பீல்டு உயர்த்திருப்பதாகும்.


Click it and Unblock the Notifications









