Royal Enfield New Factory திருவண்ணாமலையில்! 1,500 கோடி ரூபாயை கொட்ட போறாங்க! இதைதான் தயாரிக்க போறாங்களா!
உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், சென்னை (Chennai) நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. எனவே சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில்தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் உற்பத்தி தொழிற்சாலைகள் (Manufacturing Plants) இயங்கி கொண்டுள்ளன.
சென்னைக்கு அருகே உள்ள ஒரகடம் மற்றும் வல்லம் வடகல் ஆகிய தொழிற்சாலைகளில், ராயல் என்பீல்டு நிறுவனத்தால் ஒரு ஆண்டுக்கு 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும். 1 மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும். ஆனால் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கான டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது.

குறிப்பாக உலகம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் கவனத்தை திருப்பி கொண்டிருக்கும் தற்போதைய நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனம் கூடிய விரைவில் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு ஏதுவாக சென்னைக்கு அருகே மேலும் ஒரு தொழிற்சாலையை அமைக்க ராயல் என்பீல்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த புதிய தொழிற்சாலை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அமையவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக செய்யாறு பகுதியில் 60 ஏக்கர் நிலத்தை ராயல் என்பீல்டு நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 12-24 மாதங்களில் இந்த புதிய ஆலையில் 1,000 - 1,500 கோடி ரூபாயை ராயல் என்பீல்டு நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக தெரிகிறது.

எனவே வரும் 2025ம் ஆண்டிற்குள், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய செய்யாறு தொழிற்சாலை பயன்பாட்டு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் பைக்குகளையும், சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள பைக்குகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் வழக்கமான ஐசி இன்ஜின் (Internal Combustion Engine) பைக்குளைதான் இந்த தொழிற்சாலையில் தயாரிக்க ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகள் வேகம் எடுத்துள்ளதால், இந்த தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்யலாம் என ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவை மாற்றியதாக கூறப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் கிட்டத்தட்ட 1,500 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் (Tamil Nadu) முதலீடு செய்யவுள்ளதால், புதிய வேலைவாய்ப்புகள் பெரும் அளவில் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே இது தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு (Economy) நன்மையை ஏற்படுத்த கூடிய விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது, புல்லட் 350 (Bullet 350), கிளாசிக் 350 (Classic 350), ஹண்டர் 350 (Hunter 350), மீட்டியோர் 350 (Meteor 350), சூப்பர் மீட்டியோர் 650 (Super Meteor 650), இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) உள்ளிட்ட பல்வேறு பைக்குகளை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
இந்தியாவில் சிறிய நிறுவனங்கள் பலவும் தற்போது எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கி விட்டன. முன்பெல்லாம் அரிதாக இருந்த எலெக்ட்ரிக் பைக்குகளை தற்போது சாலைகளில் ஓரளவிற்கு காண முடிகிறது. எனவே எலெக்ட்ரிக் பைக்குகளின் உற்பத்திக்காக ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தொழிற்சாலையில் முதலீடு செய்வது சரியான நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








