போட்டி நிறுவனங்களை அடிச்சு துவம்சம் செய்த ராயல் என்பீல்டு.. பழைமையான நிறுவனம்றத நிரூபிச்சுட்டாங்க!
உலகின் மிகவும் பழைமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ராயல் என்பீல்டு (Royal Enfield)-ம் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் சென்ற நிதியாண்டில் அமோக விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த நிதியாண்டில் மட்டுமின்றி நடந்து முடிந்த 2023 மார்ச்-சிலும் இந்த நிறுவனம் நல்ல விற்பனை வளர்ச்சியையேப் பெற்றிருக்கின்றது. 2022-23 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 8,34,895 யூனிட் ராயல் என்பீல்டு இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. நிறுவனத்தின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்க்கையில் இது வரலாறு காணாத அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும்.

இதற்கு முன்னர் இந்த அளவு அதீத எண்ணிக்கையில் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகியதே இல்லை. இது சென்ற நிதியாண்டைக் காட்டிலும் 38.63 சதவீதம் அதிகம் விற்பனையாகும். 2021-22 நிதி ஆண்டில் 6,02,268 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைக்காட்டிலும் நடந்து முடிந்த நிதியாண்டில் 2,32,627 யூனிட்டுகள் அதிகமாக விற்பனையாகி இருக்கின்றன.
2022-23 நிதியாண்டின் ஒட்டுமொத்த விற்பனையில் 7,34,840 யூனிட்டுகள் உள்நாட்டில் விற்பனையாகியவை ஆகும். மீதமுள்ள 1,00,055 யூனிட்டுகளே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். இரண்டு பிரிவும் சென்ற நிதியாண்டில் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. உள்நாட்டு விற்பனை 40.98 சதவீதமும், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பிரிவு 23.48 சதவீதம் வளர்ச்சியையும் 2021-22 நிதியாண்டைக் காட்டிலும் கடந்த நிதியாண்டில் பெற்றிருக்கின்றது.
இதேபோல், சென்ற ஆண்டின் மார்ச்சைக் காட்டிலும் நடப்பாண்டு மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனையாகி இருக்கின்றன. 2022 மார்ச் மாதத்தில் 67,677 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகிய நிலையில், மார்ச் 2023இல் 72,235 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன.
இது 6.73 சதவீத விற்பனை வளர்ச்சி ஆகும். சென்ற மாதத்தில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பிரிவு சற்று கூடுதல் வளர்ச்சியைக் கண்டிருக்கின்றது என கூறலாம். 2022 மார்ச் மாதத்தில் 9,200 யூனிட்டுகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2023 மார்ச்சில் 12,351 யூனிட்டுகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன.
இது 34.25 சதவீதம் அதிக எண்ணிக்கை ஆகும். நிறுவனம் புதிய இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கியதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. இதேபோல் ராயல் என்பீல்டுக்கு போட்டி அளிக்கும் விதமாக எதிராலி நிறுவனங்கள் புதுமுகங்களை களமிறக்கி இருந்தன. இருப்பினும், அவைகளிடம் போராடி ராயல் என்பீல்டு இந்த விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.
இந்த விற்பனை வளர்ச்சிக்கு ஹண்டர் 350, மீட்டியோர் 350 மற்றும் கிளாசிக் 350 ஆகிய மாடல்களே பெரும் உதவியாக இருந்திருக்கின்றன. ஆமாங்க இவற்றிற்கே நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. தற்போது மீட்டியோர் 350க்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் நிறுவனம் அதன் சூப்பர் மீட்டியோர் 650-ஐ விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இதற்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ஹோண்டா, பஜாஜ் மற்றும் டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ராயல் என்பீல்டுக்கு போட்டியாக இருசக்கர வாகன மாடல்களைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. போட்டியாளர்களின் தயாரிப்பை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் அடித்து துவம் செய்திருப்பதை இந்த விற்பனை வளர்ச்சிக்கு நமக்கு தெரியப்படுத்துகின்றன. வரும் காலத்திலும் இதேபோல் அதிக விற்பனையை இந்த நிறுவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








