இத்தாலி முழுக்க நம்ம தமிழ்நாட்டு தயாரிப்பை பற்றிதான் பேச்சு.. என்னங்க பாத்த உடனே மிரண்டு போற மாதிரி இருக்கு!
தமிழகத்தை மையமாகக் கொண்டு இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் உலக புகழ்பெற்ற நிறுவனமாக ராயல் என்பீல்டு (Royal Enfield) இருக்கின்றது. இந்த நிறுவனம் தற்போது இத்தாலியின் மிலனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 இஐசிஎம்ஏ (2023 EICMA) ஷோ-வில் தனது பங்களிப்பை வழங்கும் விதமாக சில இருசக்கர வாகன மாடல்களை காட்சிப்படுத்தி இருக்கின்றது.
அந்தவகையில், நிறுவனம் காட்சிப்படுத்திய அதன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்து இருக்கின்றது. நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் பிரபலமான இருசக்கர வாகன மாடல்களில் ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) -ம் ஒன்றாகும்.

இந்த பைக் மாடலையே ராயல் என்பீல்டு நிறுவனம் அதிக கவர்ச்சியான வாகனமாக அதன் கஸ்டமைசேஷன் செயலின் வாயிலாக மாற்றி அமைத்து இருக்கின்றது. சொல்லப் போனால் இது "ஏதோ புது முக தயாரிப்பு" என கூறும் அளவிற்கு உள்ளது. அவ்வாறே பைக் தனித்துவமான தோற்றத்தை கஸ்டமைசேஷன் வாயிலாக ராயல் என்ஃபீல்டு வழங்கி இருக்கின்றது.
ஒன்றல்ல, மொத்தமாக இரண்டு கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஹண்டர் 350 மாடல்களை அது இந்த ஷோவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. 2023 இஐசிஎம்ஏ-வில் பார்வையாளர்களைக் கவர வேண்டும் என்கிற நோக்கிலேயே நிறுவனம் இந்த பைக்குகளை அங்கு காட்சிப்படுத்தி இருக்கின்றது. இந்த நோக்கத்தை கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஹண்டர் 350 பூர்த்தி செய்துவிட்டதா என கேட்டால், மிக சூப்பராகவே அது பூர்த்தி செய்திருக்கின்றது கூறலாம்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிற உலக நாட்டவர்களையும் இந்த பைக் வெகுவாக கவர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கே முற்றிலும் தனித்துவமான மற்றும் மாறுபட்ட ஸ்டைல் மற்றும் தோற்றத்திலேயே இந்த பைக் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
டயர், வீல், ஹெட்லைட், ஃப்யூவல் டேங்க், இருக்கைகள் மற்றும் பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் நிறம் என பலவற்றை கஸ்டமைஸ் வாயிலாக மாற்றியிருக்கின்றது, ராயல் என்பீல்டு. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ஹண்டர் 350 சேஸிஸ் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்கள் என சிலவற்றை மட்டுமே அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மலிவு விலை மோட்டார்சைக்கிளாக ஹண்டர் 350 இருக்கின்றது. இதனை நிறுவனம் புதிய 'ஜே' பிளாட்பாரத்தை பயன்படுத்தியே தயாரித்து இருக்கின்றது. இலகுவான எடைக் கொண்ட ராயல் என்பீல்டு பைக்கை விரும்புவோர்களுக்கு என்றே விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட மோட்டார்சைக்கிள் இது ஆகும்.
இதற்கே டஃப் கொடுக்கும் வகையில் இதன் மாடிஃபிகேஷன் வெர்ஷன்கள் இருக்கின்றன. இவை விற்பனைக்குக் கொண்டு வரப்படுமா என்பது பற்றிய விபரங்கள் கேள்விக் குறியாகவே இருக்கின்றது. தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, இந்த பைக்குகள் 2023 ஐசிஎம்ஏ-வில் காட்சிப்படுத்த மட்டுமே தயார் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், இந்த கஸ்டமைசேஷனை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அது நடைபெறும் என்பது பற்றிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது சந்தையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 ரூ. 1,49,900 தொடங்கி ரூ. 1,68,900 வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஹண்டர் 350 விற்பனைக்குக் கொண்டு வரப்படும் எனில் இதைவிட பல ஆயிரங்கள் அதிகம் கொண்டதாக அது இருக்கும். இருப்பினும், தனித்துவமான ரைடு அனுபவம் மற்றும் அதிக பார்வையாளர்களை இந்த பைக்கால் நம்மால் ஈர்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட வாகனங்களுக்கு இரண்டு சக்கர வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்திய இருசக்கர வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ராயல் என்பீல்டு இரு தரமான கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிளை உலக புகழ்பெற்ற மோட்டார் வாகன ஷோவில் வெளியீடு செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









