யாரும் தடுக்க முடியாத அசூர வேகத்தில் வளரும் ராயல் என்ஃபீல்டு! ஏப்ரல் மாத விற்பனையே இவ்வளவா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதில் இந்நிறுவனம் கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் தனி மவுசு உள்ளது. இந்நிறுவனத்திற்குப் போட்டியாக எந்நிறுவனம் வந்தாலும் இந்நிறுவனத்தின் இடத்தை பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்க இளைஞர்கள் பலர் பல ஆண்டுகளாகக் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

Royal Enfield Sales Report April 2023

இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 73,136 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த மார்ச் மாதம் வெறும் 62,155 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஒரே மாதத்தில் இந்நிறுவனம் 18 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை 2 பிரிவாகப் பிரித்து விற்பனை செய்து வருகிறது. 350 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்கள், 350 சிசிக்கு அதிகமான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்கள் என இரண்டு பிரிவுகளாக விற்பனை செய்து வருகிறது இதில் ஒவ்வொரு பிரிவுகளுக்குமான விற்பனை ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.

Royal Enfield Sales Report April 2023

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இந்நிறுவனம் 64,728 வாகனங்களை 350சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகன பிரிவில் விற்பனை செய்துள்ளது. 350 சிசிக்கு அதிகமான இன்ஜின் திறன் கொண்ட வாகன பிரிவில் 8408 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 350 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட பிரிவில் 51,564 வாகனங்களும் 350 சிசிக்கு அதிகமான இன்ஜின் திறன் கொண்ட பிரிவில் 10,591 வாகனங்களும் விற்பனையாகியிருந்தது.

இதை ஒப்பிட்டால் 350 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகன பிரிவில் விற்பனை 25.53 சதவீத சதவீத வளர்ச்சியும், 350 சிசிக்கு அதிகமான இன்ஜின் திறன் கொண்ட வாகன பிரிவில் 20.61 சதவீதம் விற்பனை வீழ்ச்சியும் நிகழ்ந்துள்ளது.

Royal Enfield Sales Report April 2023

இதுவே உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி எனப் பிரித்தால் கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 68,881 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகியுள்ளது. இதுவே வெளிநாட்டு ஏற்றுமதியைப் பார்த்தால் 4,225 வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத விற்பனை
யுடன் ஒப்பிட்டால் உள்நாட்டு விற்பனையில்27.91 சதவீத வளர்ச்சியும். வெளிநாட்டு ஏற்றுமதியில் 48.75 சதவீத வீழ்ச்சியையும் இந்நிறுவனம் சந்தித்துள்ளது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் ஓராண்டில் இந்நிறுவனம் 17.67 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

Royal Enfield Apr-23 Apr-22 Growth (%) YoY
64,728 51,564 25.33
>350cc 8,408 10,591 -20.61
Domestic 68,881 53,852 27.91
Exports 4,255 8,303 -48.75
Total 73,136 62,155 17.67
Royal Enfield Apr-23 Mar-23 Growth (%) MoM
64,728 62,522 3.53
>350cc 8,408 9,713 -13.44
Domestic 68,881 59,884 15.02
Exports 4,255 12,351 -65.55
Total 73,136 72,235 1.25

இதுவே கடந்த மார்ச் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது, கடந்த மார்ச் மாதம் 350 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்கள் 62,522 என்ற எண்ணிக்கையிலும், 350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்கள் 9,713 என்ற எண்ணிக்கையிலும் விற்பனையாகியுள்ளது. இதன்படி பார்த்தால் 350சிசிக்கு குறைவான வாகனங்கள் 3.53 சதவீத வளர்ச்சியையும், 350 சிசிக்கு அதிகமான வாகனங்கள் 13.44 சதவீத வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.

உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதியைப் பொருத்தவரை கடந்த மார்ச் மாதம் 59,884 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகியிருந்தன. 12,351 வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில் உள்நாட்டு விற்பனையில் 15.02 சதவீத வளர்ச்சியையும், வெளிநாட்டு ஏற்றுமதியில் 65.55 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் 1.25 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் ஒரு மாதத்தில் பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டது. இதற்குப் போட்டியாக ஒரு நிறுவனம் உருவாகுவது என்பது குதிரைக் கொம்பைப் பிடிப்பது போன்ற விஷயம் தான். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வளர்ச்சி தடுக்க முடியாத அளவில் இருக்கிறது என்பதே உண்மை!

More from DriveSpark

Article Published On: Tuesday, May 2, 2023, 16:00 [IST]
English summary
Royal enfield sales report april 2023 segment wise growth and decline details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X