இந்த புது ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு சரியான போட்டினா அது இந்த பைக் மட்டும்தான்!! எதை வாங்குவது என்றே தெரியல!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அதன் ஷூட்கன் 650 பைக்கை வெளியீடு செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டின் இந்த புதிய 650சிசி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4 இலட்சத்திற்கு மேல் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஷூட்கன் 650 மோட்டார்சைக்கிள் அடுத்த 2024ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

விற்பனையில் ஷூட்கன் 650 பைக்கிற்கு சொந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சூப்பர் மீட்டியோர் 650 பைக் போட்டியாக விளங்கவுள்ளது. சூப்பர் மீட்டியோர் 650 பைக்கையும் இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஷூட்கன் 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகள் இனி பார்க்கலாம்.

shotgun 650 vs super meteor 650

டிசைன்: தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய ஷூட்கன் 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆனவைகளாகவே உள்ளன. ஏனெனில், இரண்டும் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்கள் ஆகும். சூப்பர் மீட்டியோரை காட்டிலும், ஷூட்கன் 650 பைக்கின் ஹெட்லைட் அளவில் சற்று சிறியதாக உள்ளது. புதிய ஷூட்கன் 650 பைக்கின் பெட்ரோல் டேங்க் நீர்த்துளி வடிவில் 14 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்படுகிறது.

தொழிற்நுட்ப வசதிகள்: இந்த இரு பைக்குகளிலும் ட்ரிப்பர் நேவிகேஷன் உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. ஆனால், புதிய ஷூட்கன் 650 பைக்கில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் பொசிஷன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திரையை கண்ட்ரோல் செய்ய ரோட்டரி ஸ்டைலில் ஸ்விட்ச் வழங்கப்படுகிறது.

shotgun 650 vs super meteor 650

பயண சூழல்: பாப்பர்-ஸ்டைல் உடலமைப்புக்கு ஏற்ப ஷூட்கன் 650 பைக்கில் ட்ராக்-ஸ்டைல் ஹேண்டில்பார் வழங்கப்படுகிறது. அத்துடன், ஷூட்கன் 650 பைக்கில் ஒரேயொரு இருக்கை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் இருக்கை வேண்டுமென்றால், கூடுதல் கட்டணத்துடன் ராயல் என்ஃபீல்டு பொருத்தி தரும். ஷூட்கன் 650-இல் ரைடர் கால் வைக்கும் பகுதி நேராக இருக்கைக்கு கீழே வழங்கப்படுகிறது. ஆனால், சூப்பர் மீட்டியோரில் சவுகரியத்திற்காக சற்று முன்னோக்கி வழங்கப்படுகிறது.

என்ஜின்: ஷூட்கன் 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 என இரு பைக்குகளிலும் ஒரே மாதிரியான 648சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் சூப்பர் மீட்டியோரில் அதிகப்பட்சமாக 46.2 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால், இதே என்ஜின் ஷூட்கன் 650-இல் எத்தகைய இயக்க ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.

shotgun 650 vs super meteor 650

பரிமாண அளவுகள்: சூப்பர் மீட்டியோர் 650 உடன் ஒப்பிடுகையில், ஷூட்கன் 650-இன் உயரம் குறைவு. அத்துடன் இந்த புதிய பைக்கில் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் சூப்பர் மீட்டியோரை காட்டிலும் குறைவு. இதனால், பைக்கை ஹேண்டில் செய்வது இன்னும் எளிமையானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், பைக் கைக்கு வந்து, டெஸ்ட் ரைடு செய்து பார்த்தால்தான் எதையும் உறுதியாக கூற முடியும்.

சக்கரங்கள்: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஷூட்கன் 650 பைக்கிற்கான தனது வழக்கமான வீல் அசெம்பிளியை ஆல்டர் செய்துள்ளது. இந்த புதிய பைக்கில் முன் சக்கரம் அளவில் சிறியதாக வடிவமைக்கப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப டயரின் வலிமை அதிகமானதாக வழங்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக, ஷூட்கன் 650 பைக்கில் வளைவுகளில் திரும்புவது இன்னும் எளிமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஷூட்கன் 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 இவை இரண்டுமே ராயல் என்பீல்டின் மாடர்ன் பைக்குகள் ஆகும். இவை இரண்டில் எதை வாங்குவது என்கிற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இதற்கு உங்கள் சவுகரியமே பதில். அதாவது, ஷூட்கன் 650 பைக் ஆனது நிமிர்ந்த ரைடிங் பொசிஷனை கொண்டது. ஆனால், சூப்பர் மீட்டியோர் 650 ஆனது க்ரூஸர் ரக பைக்குகளுக்கே உண்டான சவுகரியமான ரைடிங் பொசிஷனை வழங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 3, 2023, 12:39 [IST]
English summary
Royal enfield shotgun 650 vs super meteor 650 comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X