பெட்டி பெட்டியா வெளிநாடுகளுக்கு பயணித்த சூப்பர் மீட்டியோர்650! ராயல் என்பீல்டு அதோட வேலைய காட்ட தொடங்கிருச்சு!

ராயல் என்பீலட்டு நிறுவனத்தின் புதிய வருகையாக சூப்பர் மீட்டியோர் 650 உள்ளது. இந்த பைக்கை இந்தியாவில் டெலிவரி செய்யும் முன்னரே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கின்றது. இதற்காக தற்போது பெட்டி பெட்டியாக பைக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதுமுக வருகையாக சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650) இருக்கின்றது. இந்த பைக் மாடலின் விற்பனையை இந்தியாவில் சில தினங்களுக்கு முன்னரே ராயல் என்பீல்டு தொடங்கியது. இதற்குள்ளாக, இந்த பைக் மாடலை ஏற்றுமதி செய்ய அந்நிறுவனம் தொடங்கிவிட்டது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ஏற்கனவே பெட்டி பெட்டியாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்குகளை ராயல் என்பீல்டு வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டது.

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 350

படங்கள் வெளியாகியிருக்கு

இதுகுறித்த படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து நாட்டிற்கே புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. அந்த நாட்டில் இருசக்கர வாகனங்கள் நிற்பதைப் போன்றும், பெட்டிகளில் மோட்டார்சைக்கிளுக்கான பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது போன்ற படங்களே வெளியாகி உள்ளன. இதுவே அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் முதல் லாட் சூப்பர் மீட்டியோர் 650 பைக்குகள் ஆகும்.

முதல் லாட்

அங்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து அடுத்தடுத்த லாட்களை அந்நாட்டிற்கு அனுப்பி வைக்க ராயல் என்பீல்டு திட்டம் போட்டு உள்ளது. இங்கிலாந்து மட்டுமின்ற உலக பிறவற்றிற்கும் மோட்டார்சைக்கிளை ஏற்றுமதி செய்ய ராயல் என்பீல்டு திட்டம் போட்டு உள்ளது. இந்தியாவில் தற்போது பைக்கிற்கான விற்பனை பணிகள் மட்டுமே தொடங்கி உள்ளன. இன்னும் டெலிவரி பணிகள் தொடங்கப்படவில்லை. இதற்குள்ளாகவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியை ராயல் என்பீல்டு கையில் எடுத்துள்ளது.

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 350

இது வழக்கம் இல்லையே

பொதுவாக, நிறுவனம் உள்நாட்டில் விற்பனை மற்றும் டெலிவரியைத் தொடங்கிய பின்னரே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். ஆனால், புதிய சூப்பர் மீட்டியோர் 650 விஷயத்தில் உள்நாட்டு சந்தையில் டெலிவரியைத் தொடங்கும் முன்னரே ஏற்றுமதியைத் தொடங்கி இருக்கின்றது. இது இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. நிறுவனத்தின் ட்வின் பைக் மாடல்களான இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் 650 ஆகியவற்றிற்கு உலக சந்தையில் நல்ல நிலையில் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

நம்பிக்கை அதிகம்

இந்த நிலையிலேயே புதியதொரு 650 சிசி மோட்டார்சைக்கிளான சூப்பர் மீட்டியோர் 650-ம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றது. இதற்கும் உலக அளவில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நிறுவனம் நம்புகின்றது. இதன் அடிப்படையிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில தினங்களிலேயே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியை அனல் பறக்க ராயல் என்பீல்டு தொடங்கி இருக்கின்றது. பற்பல புதிய சிறப்பம்சங்களைக் கொண்ட ராயல் என்பீல்டு பைக்காக சூப்பர் மீட்டியோர் 650 உருவாகி உள்ளது.

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 350

ராயல் என்பீல்டின் தயாரிப்பிலேயே அசத்தலானது

அந்தவகையில், இதுவரை எந்தவொரு ராயல் என்பீல்டு பைக்கும் பெற்றிராத அம்சமான யுஎஸ்டி ஃபோர்க்கை சூப்பர் மீட்டியோர் 650 பெற்றிருக்கின்றது. இத்துடன், எல்இடி ஹெட்லைட் பெறும் முதல் ராயல் என்பீல்டு தயாரிப்பாகவும், டிரிப்பர் நேவிகேஷனை ஸ்டாண்டர்டு அம்சமாக பெறும் முதல் ராயல் என்பீல்டு தயாரிப்பாகவும் சூப்பர் மீட்டியோர் 650-.யே உள்ளது. இதுமட்டுமில்லைங்க இது ஓர் கவர்ச்சிகரமான க்ரூஸர் ரக பைக்காகும். இந்த மாதிரியான பைக்கிற்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு.

எவ்வளவுக்கு விற்கப்பட இருக்கு?

குறிப்பாக, வட அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் க்ரூஸர் ரக பைக்குகளுக்கு டிமாண்ட் மிக அமோகம். இந்த மாதிரியான சூழலிலேயே அட்டகாசமான தயாரிப்பாக சூப்பர் மீட்டியோர் 650 வெளிநாடுகளுக்கான தனது பயணத்தைத் தொடங்கி இருக்கின்றது. இங்கிலாந்தில் இந்த பைக் ரூ. 6.87 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்த மூன்று விதமான தேர்வுகளில் அந்நாட்டில் சூப்பர் மீட்டியோர் 650 விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்திய மதிப்பு விபரம்

ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் 648 சிசி பேரல்லல் ட்வின் எஞ்ஜினைப் பயன்படுத்தி இருக்கின்றது. இது அதிகபட்சமாக 46.7 பிஎச்பி பவரையும், 52.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்தியாவில் ரூ. 3.48 லட்சம் தொடங்கி ரூ. 3.78 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அஸ்ட்ரல், இன்டர்ஸ்டெல்லர் மற்றும் செலஸ்டியல் ஆகிய மூன்று விதமான தேர்வுகளிலேயே சூப்பர் மீட்டியோர் 650 விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Royal enfield super meteor 650 exported to uk
Story first published: Tuesday, January 31, 2023, 14:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X