போட்றா வெடிய! இந்த பைக்கிற்காகதான் ராயல் என்பீல்டு ரசிகர்கள் வெயிட்டிங்! இன்னும் ரெண்டே நாள்ல லான்ச் ஆகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650). கடந்த 2022ம் ஆண்டே, ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் இந்திய சந்தையில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

ஆனால் இந்த பைக்கின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த பைக்கின் விலைகளை தெரிந்து கொள்வதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் அதிகாரப்பூர்வ விலை வரும் ஜனவரி 16ம் தேதி (January 16) அறிவிக்கப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

போட்றா வெடிய! இந்த பைக்கிற்காகதான் ராயல் என்பீல்டு ரசிகர்கள் வெயிட்டிங்! இன்னும் ரெண்டே நாள்ல லான்ச் ஆகுது!

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில், 650 சிசி, பேரலல் ட்வின், ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஹெச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரசிகராக இருந்தால், இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) ஆகிய பைக்குகளை பற்றி தெரிந்திருக்கும்.

இந்த பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின்தான், ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் குணாதிசயங்களுக்கு பொருந்தும் வகையில், இந்த பைக்கில் ராயல் என்பீல்டு நிறுவனம் சற்றே ரீ-ட்யூனிங் செய்துள்ளது. ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முன் பகுதியில் 43 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்குகளும், பின் பகுதியில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது.

போட்றா வெடிய! இந்த பைக்கிற்காகதான் ராயல் என்பீல்டு ரசிகர்கள் வெயிட்டிங்! இன்னும் ரெண்டே நாள்ல லான்ச் ஆகுது!

அதே நேரத்தில் இந்த பைக்கின் 2 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. வசதிகளை பொறுத்தவரையில் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியுடன், ட்வின்-போடு இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களை, ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் பெற்றுள்ளது. எனவே ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் விலை சற்று அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் விலை 3.50 லட்ச ரூபாய்க்கு உள்ளே இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் இந்த பைக்கிற்கு நேரடி போட்டி என எந்த மாடல்களும் இல்லை. ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை தொடர்ந்து, இந்தியாவின் 650 சிசி செக்மெண்ட்டில் இன்னும் பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. இதில், 650 சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்கும் ஒன்றாகும்.

இந்த 650 சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக், ஷெர்பா என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர இந்தியாவின் 450 சிசி செக்மெண்ட்டிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே ராயல் என்பீல்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் காத்து கொண்டுள்ளது என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகம் இல்லை.

அத்துடன் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ள புல்லட் 350 பைக்கின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலையும் ராயல் என்பீல்டு (Royal Enfield Bullet 350) நிறுவனம் நடப்பு 2023ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய மாடல், அனேகமாக வரும் பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, January 13, 2023, 22:56 [IST]
English summary
Royal enfield super meteor 650 india official launch date january 16
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+