வெளியிட்ட ஒற்றை படத்தை வெறிக்க வெறிக்க பார்த்த டூ-வீலர்கள் காதலர்கள்! அந்த பைக்கா இது? தரமா ரெடி பண்ணிட்டாங்க!

இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. உள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக புதுமுக வாகனங்களைக் களமிறக்கிக் கொண்டிருப்பதே இந்த நிலைக்கு காரணமாக உள்ளது. வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் முன்னிலை இடத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே தொடர்ச்சியாக புதிய வாகனங்களைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன.

மேலும், அதற்காக அவை கடுமையாக உழைத்துக் கொண்டும் இருக்கின்றன. அந்தவகையில், இந்தியாவின் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield)-ம் தன்னுடைய முன்னிலை இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

Royal enfield himalayan 452

இதன் அடிப்படையில் இந்திய சந்தையில் விரைவில் சில புதுமுக மோட்டார்சைக்கிள் மாடல்களை அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் மோட்டார்சைக்கிள்களில் ஹிமாலயன் 452-வும் ஒன்றாகும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த நிலையிலேயே ஹிமாலயன் 452 மோட்டார்சைக்கிளின் டீசரை ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. ஏற்கனவே இதேபோல் ஹிமாலயன் 452 பைக்கின் அழகை விவரிக்கும் படத்தை அது வெளியிட்டு இருந்த நிலையில், மீண்டும் ஒரு முறை அந்த பைக்கின் டீசர் படத்தை வெளியிட்டு இந்திய இருசக்கர வாகன பிரியர்களின் மனதைக் கவர்ந்திருக்கின்றது, ராயல் என்பீல்டு.

Royal enfield himalayan 452 wheel

தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் படம் ஹிமாலயன் 452 பைக்கை மிகவும் தெளிவாகக் காண்பிக்கும் வகையில் உள்ளது. கேமெட் ஒயிட் எனும் பிரத்யேக நிற தேர்வில் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் ஹிமாலயன் 452 பைக்கின் டீசர் படத்தையே ராயல் என்பீல்டு வெளியீடு செய்திருக்கின்றது.

இந்த பைக்கை வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் ராயல் என்பீல்டு வெளியீடு செய்ய இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக்கில் ராயல் என்பீல்டு நிறுவனம் 451.65 சிசி திறன் கொண்ட சிங்கில் சிலிண்டர், லிக்யூடு கூல்டு மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது.

இது அதிகபட்சமாக 40 பிஎச்பி மற்றும் 40 என்எம் டார்க்கை வெளியேற்றும் என கூறப்படுகின்றது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் வழங்கப்பட இருக்கின்றது. இது மிக சுலபமான ஷிஃப்டிங் வசதிக் கொண்ட கியர்பாக்ஸ் என கூறப்படுகின்றது. இதற்காக ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதிகள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், இந்த பைக்கின் எடையும் மிகக் குறைவே ஆகும். சமீபத்திய தகவல்களின் வாயிலாக இந்த பைக்கின் ஒட்டுமொத்த எடையே வெறும் 196 கிலோ மட்டுமே என்பது தெரிய வந்திருக்கின்றது. இது ஹிமாலயன் 411 மாடலைக் காட்டிலும் 3 கிலோ வரை குறைவான எடை ஆகும்.

ஆகையால், ஹேண்ட்லிங் மிக சுலபமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. தொடர்ந்து, அழகிலும் ஹிமாலயன் 452 அசத்தும் தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. வட்ட வடிவ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், மேப் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சமும் இந்த மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், பாதுகாப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் பொருட்டு டூயல் சேனல் ஏபிஎஸ், ஆஃப்-ரோடு மோட், ஹசார்டு லைட்டுகள் மற்றும் சைடு ஸ்டாண்டு போட்டால் தானாக எஞ்ஜினை ஆஃப் செய்யும் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் ஹிமாலயன் 452-வில் ராயல் என்பீல்டு வழங்கி இருக்கின்றது.

எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிக சிறந்த தயாரிப்பாக இது காட்சியளிக்கும் என நம்பப்படுகின்றது. மேலும், தடையில்லா டிராவலை உறுதி செய்யும் விதமாக இந்த பைக்கில் ட்யூப் லெஸ் (Tube Less Tyre) டயர் மற்றும் ஸ்போக் வீல் (Spoked Wheels)களும் வழங்கப்பட இருக்கின்றன.

தொடர்ந்து, இந்தியாவின் கரடு-முரடான சாலையை சமாளிக்க ஏதுவாக ஹிமாலயன் 452-வின் முன் பக்கத்தில் அப்-சைடு டவுன் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. சிறந்த பிரேக்கிங்கிற்காக இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற அனைத்திலும் தரமான தயாரிப்பாக ஹிமாலயன் 452 உருவாக்கப்பட்டு இருப்பதானலேயே பலரின் எதிர்பார்ப்பை அந்த பைக் தூண்டி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் ஹிமாலயன் பைக் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை விரிவுப்படுத்தும் விதமாகவே ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயனில் பல்வேறு வெர்ஷன்களை விற்பனைக்குக் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றது. நிறுவனத்தின் கிளாசிக் பைக் மாடலைபோல இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2023, 16:02 [IST]
English summary
Royal enfield teased himalayan 452 again
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+