சென்னையை தாண்டி 2புதிய நாடுகளில் அசெம்பிள் ஆலையை திறக்கும் ராயல்என்பீல்டு! ஊர விட்டு காலி பண்ண போறாங்களா என்ன?

ராயல் என்பீல்டு நிறுவனம் அண்டை நாடுகளான வங்க தேசம் மற்றும் நேபாளம் ஆகிய இரண்டிலும் இருசக்கர வாகன அசெம்பிள் செய்யும் மையத்தை புதிதாக திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வெளியாகி இருக்கும் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ராயல் என்பீல்டு. இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. இங்கு வைத்தே இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திற்கும் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆகையால், நிறுவனத்தின் முதன்மையான ஆலையாக இது இருக்கின்றது.

அசெம்பிள் ஆலையை

இதன் உடன் இணைந்து இயங்கும் வகையிலேயே புதிய அசெம்பிள் ஆலைகள் வேற்று நாட்டில் திறக்கப்பட இருக்கின்றன. எனவே இவற்றால் சென்னை ஆலைக்கு எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படாது என கூறப்படுகின்றது. இந்த நிலையில், நேபாளம் மற்றும் வங்க தேசம் ஆகிய இரு நம்முடைய அண்டை நாடுகளிலும் மோட்டார்சைக்கிளை அசெம்பிள் செய்யும் புதிய மையங்களை ராயல் என்பீல்டு திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய உற்பத்தி திறனையும், வெளிநாட்டு சந்தையையும் விரிவுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கையில் களமிறங்கி இருக்கின்றது, ராயல் என்பீல்டு. தற்போதைய நிலவரப்படி 40க்கும் அதிகமான நாடுகளில் இந்த நிறுவனம் வர்த்தக பணிகளை மேற்கொண்ட வருகின்றது.

அசெம்பிள் ஆலையை

250 சிசி தொடங்கி 750 சிசி வரையிலான திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. புதிய அசெம்பிள் ஆலையினால் உலக நாடுகளில் இந்த பைக்கிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு இரு மடங்காகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில் இது என்ன மாதிரியான பிளானில் வங்கம் மற்றும் நேபாளத்தில் செயல்பட இருக்கின்றது என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

இப்போதைய நிலவரப்படி ராயல் என்பீல்டு நிறுவனம் ஆயிரக் கணக்கில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு மோட்டார்சைக்கிள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் நிறுவனம் 12,351 யூனிட்டு மோட்டார்சைக்கிள்களை ஏற்றுமதி செய்திருக்கின்றது. இதே நிறுவனம் 2023 பிப்ரவரியில் வெறும் 7,108 மோட்டார்சைக்கிள்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது.

அசெம்பிள் ஆலையை

இதை வைத்து பார்க்கையில் 73.76 சதவீதம் ஒரே மாதத்தில் ஏற்றுமதி வளர்ச்சியை ராயல் என்பீல்டு சந்தித்து இருப்பு தெளிவாக தெரிகின்றது. அதேநேரத்தில் உள்நாட்டு சந்தையில் ராயல் என்பீல்டு இருசக்கர வாகன விற்பனை லேசாக சரிந்துக் காணப்படுகின்றது. 7.06 சதவீதம் விற்பனை சரிவையே அது சந்தித்து இருக்கின்றது.

59,884 யூனிட்டுகள் மட்டுமே 2023 பிப்ரவரியில் விற்பனையாகி இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே வெளிநாட்டு சந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக நிறுவனம் வெளிநாடுகளில் அசெம்பிள் செய்யும் பணியைத் தொடங்கி இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி ராயல் என்பீல்டு தயாரிப்புகளுக்கு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.

அசெம்பிள் ஆலையை

650 சிசி வாகனங்களுக்கே நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இரட்டையர்கள் பைக் என கருதப்படும் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் 650 ஆகியவற்றிற்கு வெளிநாட்டவர்கள் நல்-ஆதரவை வழங்கிக் கொண்டு இருக்கின்றனர். இதுதவிர, புதிதாக களமிறக்கப்பட்டு இருக்கும் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் மிக மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால், அது செல்லும் இடங்களில் எல்லாம் தன்னுடை ராஜ்ஜியத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய வர்த்தக ராஜ்ஜியத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் விதமாக இரு புதிய நாடுகளில் அசெம்பிள் ஆலையை அமைக்கும் பணியில் ராயல் என்பீல்டு களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 3, 2023, 20:20 [IST]
English summary
Royal enfield to open assembly plant in two new countries beyond chennai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X