தனி ஷோரூம் வச்சு பழைய வாகனங்களை விற்பனை செய்ய போகும் ராயல் என்பீல்டு நிறுவனம்! என்னங்க இப்படி இறங்கீட்டாங்க!
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ராயல் என்பீல்டு (Royal Enfield) இந்தியாவில் புதுமுக இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் அதி தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது. அது வெகு விரைவிலேயே புல்லட் 350 (Bullet 350), ஹிமாலயன் 450 (Himalayan 350) மற்றும் பல புதுமுக மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.
இவ்வாறு இந்த நிறுவனம் புதிய வாகனங்களை மட்டுமே விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக நம்மில் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அந்த நிறுவனமோ பழைய பயன்படுத்திய வாகனங்களையும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, ராயல் என்பீல்டு நிறுவனம் யூஸ்டு வாகன விற்பனை பிரிவிலும் கால் தடம் பதிக்க இருக்கின்றது.

ரீ-ஓவ்ன் (ReOwn) எனும் பிராண்ட் பெயரிலேயே அந்த நிறுவனம் பயன்படுத்திய வாகன விற்பனையில் களமிறங்க இருக்கின்றது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ராயல் என்பீல்டு நிறுவனம் ரீ-ஓவ்ன் எனும் புதிய அங்கத்திற்கு டிரேட்மார்க் (TradeMark) பதிவைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் வெளியாகியதைத் தொடர்ந்தே செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனையில் ராயல் என்பீல்டு களமிறங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நிறுவனம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், பெயரை வைத்தே அது செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனையில் களமிறங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்தியாவில் இதுபோன்று வாகன உற்பத்தியாளர்கள் யூஸ்டு வாகன விற்பனையில் ஈடுபடுவது முதல் முறையல்ல. புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுஸுகி, மஹிந்திரா மற்றும் பல நிறுவனங்கள் யூஸ்டு மார்க்கெட்டில் கொடிக் கட்டி பறந்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ராயல் என்பீல்டும் அதன் கால் தடத்தை இந்த பிரிவில் பதிவு செய்ய இருக்கின்றது.
இது தன்னுடைய சொந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை மட்டுமே இதில் விற்பனைக்கு வழங்குமா அல்லது பன்முக நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்குமா என்பதும் தெரியவில்லை. எங்களின் யூகிப்பின்படி ராயல் என்பீல்டு செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனையில் களமிறங்கும் எனில் அனைத்து பிராண்டுகளின் பயன்படுத்திய வாகனங்களையும் விற்பனைக்கு வழங்கும் என்றே எதிர்பார்க்கின்றோம்.
மேலும், அது விற்பனைக்கு வழங்கும் யூஸ்டு வாகனங்கள் பலதரப்பட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட விற்பனைச் செய்யப்படும். இதுதவிர, வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக வாரண்டி மற்றும் பிற சிறப்பு சலுகைகளையும் ராயல் என்பீல்டு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பெரும் எதிர்பார்ப்பாக இதுவரை புதிய தலைமுறை புல்லட் 350-ம், ஹிமாலயன் 450-ம் இருந்து வந்தது.
இப்போது, இந்த பட்டியலில் நிறுவனத்தின் ரீ-ஓவ்ன் பிராண்ட் இணைந்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்றே புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. மிக மிக கணிசமான அளவில் உருவlத்தில் மாற்றம், எஞ்ஜினில் லேசான அப்டேட் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர, கிளாசிக் 350 பைக்கில் இடம் பெற்றிருப்பதைப் போல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அனலாக் ஸ்பீடோ மீட்டர் மற்றும் சிறிய டிஜிட்டல் ரீட்-அவுட் உள்ளிட்டவையே புதிய புல்லட் 350 இல் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கின் அறிமுகத்தைத் தொடர்ந்தே பெரிதும் எதிர்பார்ப்பை தூண்டிக் கொண்டிருக்கும் ஹிமாலயன் 450 பைக்கின் அறிமுகம் அரங்கேற இருக்கின்றது. இது நவம்பர் மாதத்திற்கு அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யூஸ்டு வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. புதிய வாகனங்களுக்கு இணையாகவே இதற்கு வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே பயன்படுத்திய வாகனங்கள் பிரிவில் ராயல் என்பீல்டு அதன் கால் தடத்தைப் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications








