இப்படி ஒரு பெயரையா தன்னுடைய புதிய பைக்கிற்கு ராயல் என்பீல்டு வைக்க போகுது! பேரே செம்ம மாஸா இருக்கே!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்பீல்டு, வரவிருக்கும் புதிய பைக்கிற்கான பெயருக்கு டிரேட்மார்க் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்ன பெயர்? என்ன மாதிரியான ஸ்டைலில் அந்த பைக் இருக்கக்கூடும் என்பதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield), சமீபத்தில் ரீ-ஓவ்ன் (ReOwn) எனும் பெயருக்கு டிரேட்மார்க் (TradeMark) பதிவை செய்ததாக தகவல்கள் வெளியாகின. இது ஏதோ புதிய பைக்கிற்கான பெயர் என நினைத்துக் கொள்ள வேண்டாம். அது ஓர் பிராண்டின் பெயர் ஆகும்.

Royal enfield tradmarked guerrilla 450

"ஏற்கனவே இருக்கும் ராயல் என்பீல்டு பெயர் நல்லாதானே இருக்கு, எதற்கு புதிய பெயர் என யோசிக்கிறீங்களா". இந்த புதிய பெயர் புதிய பிசினஸுக்கானதாகும். ஆமாங்க, இந்த பெயரில் ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தொழிலை மேற்கொள்ள இருக்கின்றது. ஆனால், அதுவும் வாகன விற்பனை தொழில்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால் என்ன இந்த பெயரில் விற்பனைச் செய்யப்பட இருக்கும் வாகனங்கள் ஏற்கனவே ஒருவரால் பயன்படுத்தப்பட்டதாக இருக்கும். நீங்கள் யூகித்தது சரிதான், ராயல் என்பீல்டு நிறுவனம் ரீ-ஓவ்ன் எனும் பெயரில் யூஸ்டு டூ-வீலர் விற்பனையையே மேற்கொள்ள இருக்கின்றது. ஆனால், இந்த தகவலை ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை.

ரீ-ஓவ்ன் நிறுவனத்திற்கான டிரேட்மார்க் பதிவு பற்றிய தகவல் மட்டுமே தற்போது இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளது. இந்த நிலையிலேயே இதே ராயல் என்பீல்டு நிறுவனம் மற்றுமொரு புதிய பெயருக்கான டிரேட்மார்க் பதிவை செய்திருப்பதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்நிறுவனம் குவர்ரில்லா 450 (Guerrilla 450) எனும் பெயருக்கே டிரேட்மார்க் பதிவை செய்திருக்கின்றது.

இது வாகனத்திற்கான பெயர் ஆகும். 450 சிசி திறன்கொண்ட நிறுவனத்தின் புதிய படைப்பிற்கே இந்த பெயர் பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு தகவலையும் ராயல் என்பீல்டு உறுதி செய்யவில்லை. ஆகையால், என்ன மாதிரியான பைக் மாடலுக்கு இந்த பெயர் பயன்படுத்தப்பட இருக்கின்றது என்பதும்கூட தெரியாத சூழலே உள்ளது.

இருப்பின் பைக்கின் பெயருடன் சேர்க்கப்பட்டு இருக்கும் 450 எனும் எண்களால் புதிய பைக் ஓர் 450 சிசி டூ-வீலராக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகி இருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கையும், ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளையும் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இதன் உடன் சேர்த்து சில புது முக தயாரிப்புகளையும் அது விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பதும் தற்போது அதன் செயலின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. புதிய பெயர்களுக்கு டிரேட்மார்க் பதிவை அது செய்திருப்பதன் வாயிலாகவே இது உறுதியாகி உள்ளது.

புதிய குவர்ரில்லா 450 பைக்கில் ஹிமாலயன் 450 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 450 சிசி மோட்டாரே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், நவீன கால தொழில்நுட்ப வசதிகளும் அந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டம், சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் மிருதுவான இருக்கை அமைப்பு உள்ளிட்டவையும் குவர்ரில்லா 450 பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குவர்ரில்லா450 பைக்கிற்கு மட்டுமில்லைங்க கடந்த காலத்தில் இன்னும் பல மோட்டார்சைக்கிள்களுக்கு அது டிரேட்மார்க் பதிவை செய்திருக்கின்றது. அவற்றின் வரிசையிலேயே தற்போது குவர்ரில்லா450ம் இணைந்துள்ளது. ராயல் என்பீல்டு தற்போது புல்லட்350 மற்றும் ஹிமாலயன்450 பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. செப்டம்பர் 1 ஆம் தேதி புதிய தலைமுறை புல்லட்350 பைக்கையும், நவம்பர் மாதத்தில் ஹிமாலயன்450 பைக்கையும் ராயல் என்பீல்டு விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 29, 2023, 22:04 [IST]
English summary
Royal enfield tradmarked guerrilla 450 here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+