ராயல் என்ஃபீல்டு செம ஜாலியாக நடத்திய மோட்டோவெர்ஸ்! முழு வீடியோ இதோ!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துவதற்காக கோவாவில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யும். நீண்ட ஆண்டுகளாக ரைடர் மேனியா என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி தற்போது மோட்டோ வெர்ஸ் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சி கோவாவில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு எங்கள் குழுவினரும் சென்றிருந்தனர்.
கோவாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது ஹாட்கன் 650 என்ற பைக்கை காட்சிப்படுத்தியிருந்தது. இந்த பைக் நீண்ட நாட்களாக ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பைக்காகும். இந்த பைக் உள்ளிட்ட அந்த நிகழ்ச்சியில் என்னென்ன சம்பவங்கள் எல்லாம் நடந்தன. அங்கு வந்திருந்தவர்கள் எப்படி அதை கொண்டாடினார்கள் என்ற விரிவான விபரங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளோம் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போக பைக் ரைடிங் அனுபவங்களையும் பெரும் வகையில் ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் இருந்து கூட பல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கோவாவிற்கு சுற்றுலா வந்த பலரும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு புதுமையை செய்யும் தங்கள் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அல்லது அறிமுகப்படுத்தும் அந்த வகையில் இந்த ஆண்டு ஷார்ட் கன்சி 650 என்ற பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக் 2024 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








