ஒரு தடவை சார்ஜ் போட்டா 110 கி.மீ போகலாம்! விலையும் கம்மிதான், இந்த ஸ்கூட்டரில் என்னலாம் இருக்குது தெரியுமா?

ரன் ஆர் மொபிலிட்டி நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக எச்எஸ் இவி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரூ1.25 லட்சம் முதல் ரூ1.30 லட்சம் வரை விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என விரிவாகக் காணலாம் வாருங்கள்.

ரன்ஆர் மொபிலிட்டி நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இந்த எச்எஸ் இவி ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் மொத்தம் 5 விதமான நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. ஒயிட், பிளாக், க்ரே, ரெட், கிரீன் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரி சிஸ்டம் சற்று வித்தியாசமானது.

runr mobility hs e-scooter

இந்த ரன்ஆர் மொபிலிட்டி ஸ்கூட்டரில் 60 வேல்ட் 40 ஆம்பியர் ஹவர் லித்தியம் அயான் லிக்யூட் கூல்டு வயர்டு பவுண்டட் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் மூலம் இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் 110 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 70 கி.மீ வேகம் வரை பயணிக்கும்.

இந்த ஸ்கூட்டரில் 1.5 கிலோ வாட் பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் டிசைனை பொருத்தவரை நியோ ரெட்ரோ லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஹெட்லைட்டில் சிறிய டியூப் வடிவ லைட் பொருத்தப்பட்டுள்ளது. டெயில் லைட் எல்இடி லைட்டாக வழங்கப்பட்டுள்ளது. இதன் லுக் போட்டியாளர்கள் தயாரிப்பிற்கு போட்டி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் முன்பக்க ஏப்ரான் பகுதியில் டர்ன் இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சீட்கள் ஃபிளாட் வடிவ சீட்களாக வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் சிறிய ரியர் ரெய்ல் வழங்கப்பட்டுள்ளது. இது பில்லியன் ரைடருக்கு பயணிக்க வசதியாக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் வீல்கள் அலாய் வீல்களாக வழங்கப்பட்டுள்ளது.

அம்சங்களைப் பொருத்தவரை இதில் டிஜிட்டல் ஸ்கிரீன், ஆண்டி தெஃப்ட் வெஹிகில் லோகேடர், ரிமோட் ஃப்ளீட் மேனேஜ்மென்ட், ஓவர் தி ஏர்அப்டேட் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலையைப் பொருத்தவரை ரூ1.25-1.30 லட்சம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை போட்டியாளர்களின் விலையை விட குறைவாக இருக்கிறது.

இது குறித்து ரன்ஆர் நிறுவனத்தின் நிறுவனர் சேத்துல் ஷா கூறும்போது: "நாங்கள் புதுமையான நீடித்து உழைக்கும் தயாரிப்பை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இது மட்டுமல்ல எங்கள் தயாரிப்பு அதைப் பயன்படுத்துபவர்களுக்கு வசதியாகவும், அதே நேரம் குறைவான செலவிலும் பயணிக்க உதவும், கார்பன் எமிஷனை கட்டுப்படுத்தும். பசுமையான நகரங்களை உருவாக்க உதவும்.

எங்கள் வாகனங்களில் சிறந்த பெர்ஃபாமென்ஸ், சூப்பரான டிசைன் மற்றும் புதுமையான அம்சங்கள் எலெக்ட்ரிக் வாகன துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும். இது எதிர்காலத்திற்கான சிறப்பான பாதையை உருவாக்கும். " எனக் கூறினார். இந்த ஸ்கூட்டருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகரித்து வரும் எலெக்ட்ரிக் வாகன டிரண்டில் இந்த ரன்ஆர் நிறுவனம் தனது தயாரிப்பைத் தரமாகவும் போட்டியை ஏற்படுத்தும் வகையிலும் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் மார்கெட்டில் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். விலையும் போட்டியாளர்களுக்குச் சமமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 25, 2023, 16:00 [IST]
English summary
Runr mobility launches hs e scooter claims 110 km range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+