டிவிஎஸ், சுஸுகி ஒண்ணு சேர்ந்தா கூட ஹோண்டா கிட்ட நெருங்க முடியாது!! ஆக்டிவாவை வாங்க இத்தனை பேரா!

இந்தியாவில் கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள், அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளுடன் வெளியாகியுள்ளன. அவற்றில் டாப்-10 ஸ்கூட்டர்களை இனி பார்க்கலாம்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதை அடுத்து ஸ்கூட்டர்கள் விற்பனை இந்தியாவில் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1 போன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனையாகும் டாப்-10 ஸ்கூட்டர்களுள் ஒன்றாக தொடர்ந்து இடம் பிடிக்க ஆரம்பித்து உள்ளன.

honda activa again at 1st

இருப்பினும், இப்போதும் இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா தான். இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களால் வாங்கப்படும் மொத்த ஸ்கூட்டர்களில் கிட்டத்தட்ட பாதி ஸ்கூட்டர்களாக ஹோண்டா ஆக்டிவா உள்ளன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் ஸ்கூட்டர் வாங்குபவர்களில் 3இல் ஒருவரது தேர்வு ஆக்டிவா ஸ்கூட்டராக இருக்கிறது.

இருப்பினும், 2022ஆம் ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில், கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 2,35,056 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2022 செப்டம்பர் மாதத்தில் 10,551 ஸ்கூட்டர்கள் அதிகமாக 2,45,607 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருந்தன.

honda activa again at 1st

ஆனால், கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 2,14,872 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா ஆக்டிவாவிற்கு அடுத்து, இந்தியர்கள் அதிகளவில் வாங்கும் ஸ்கூட்டராக 2வது இடத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் உள்ளது. இருப்பினும், விற்பனை எண்ணிக்கையில் ஆக்டிவாவிற்கும், டிவிஎஸ் மோட்டாரின் ஜூபிட்டருக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

எந்த அளவிற்கு என்றால், கடந்த 2023 செப்டம்பரில் 2,35,056 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், டிவிஎஸ் ஜூபிட்டரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 83,130 மட்டுமே ஆகும். ஆனால், இந்த அளவிற்கு கூட வேறு எந்த ஸ்கூட்டரும் விற்பனையாகாததால், ஜூபிட்டர் 2வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் இந்த அளவிலேயே விற்பனையாகி இருந்தன.

honda activa again at 1st

இந்த வரிசையில் 3வது மற்றும் 4வது இடங்களில் சுஸுகி ஆக்ஸஸ் மற்றும் டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டர்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 57,041 மற்றும் 32,103 ஆகும். 5வது இடத்தில் உள்ள ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை 2022 செப்டம்பரை விட 20.05% குறைந்துள்ளது.

டியோவிற்கு அடுத்து 6வது மற்றும் 7வது இடங்களை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களான டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1 பிடித்துள்ளன. இதில் ஐக்யூப் ஸ்கூட்டர்கள் கடந்த மாதத்தில் 20,276 யூனிட்களும், எஸ்1 ஸ்கூட்டர்கள் 18,647 யூனிட்களும் விற்பனையாகி உள்ளன. இந்த லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களில் முறையே சுஸுகி பர்க்மேன், யமஹா ரே இசட்.ஆர் மற்றும் ஹீரோ டெஸ்டினி உள்ளன.

honda activa again at 1st

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்கூட்டர் என்றால் ஹோண்டா ஆக்டிவா தான் என்பதை இன்னும் சில காலத்திற்கு மாற்ற முடியாது போல இருக்கிறது. எங்களது கருத்து சரியாக இருந்தால், ஆக்டிவாவின் ஆதிக்கத்தை ஓர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் முறியடிக்கும். ஆனால், அந்த காலத்தை எட்ட இன்னும் பல வருடங்கள் ஆகிவிடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 24, 2023, 10:13 [IST]
English summary
Scooters sales honda activa again at first position all details
மேலும்... #வி்ற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X