பார்க்க ஒண்ணுமில்லாதது மாதிரி தெரியும், ஆனால் 150 கிலோவை சுமக்குமாம்!! சந்தைக்கு வரும் இரு புதிய இ-ஸ்கூட்டர்ஸ்
ஷேமா எலக்ட்ரிக் (Shema Electric) நிறுவனம் அதன் இரு புதிய அதிவேக ஹெவி-ட்யூட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியீடு செய்துள்ளது. ஈகிள்+ (Eagle+) மற்றும் டஃப்+ (TUFF+) என்ற பெயர்களில் வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஷேமா இ-வைகல் & சோலார் பிரைவேட் லிமிடெட் (SES), இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து ஈகிள்+ மற்றும் டஃப்+ என்ற இரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியீடு செய்யப்பட்டு உள்ளன. பிஸ்னஸ்-பிஸ்னஸ் மற்றும் பிஸ்னஸ்-கஸ்டமர்ஸ் என இரு விதமான மார்க்கெட்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள இவை இரண்டும் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும்.

பசுமையான போக்குவரத்துக்கான இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அட்வான்ஸான தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் செயல்திறன்மிக்க பேட்டரி தேர்வுகளை கொண்டுள்ளன. டஃப்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கு ஏற்ற எலக்ட்ரிக் வாகனமாக விளங்குகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 60kmph வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 150 கிலோ வரையிலான சுமையை ஏற்றி செல்லலாம்.
மறுப்பக்கம், ஈகிள்+ ஆனது பயணிகளுக்கான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இதன் டாப்-ஸ்பீடு 50kmph மட்டுமே ஆகும். இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் தொழிற்நுட்ப அம்சங்களாக ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், திருட்டை தடுக்கும் அலாரம், யுஎஸ்பி சார்ஜிங் துளைகள் மற்றும் செண்ட்ரல் லாக்கிங் சிஸ்டங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.
ஈகிள்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சன் மொபைலிட்டியின் ஐபி67 வாட்டர் ப்ரூஃப் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியை ஸ்கூட்டரில் இருந்து நீக்க முடியும். டஃப்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,39,999 ஆகவும், ஈகிள்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,17,199 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலைகளே மத்திய அரசின் ஃபேம்-2 மற்றும் மாநில அரசாங்களின் மானியங்களை கழித்தால் மேற்கூறப்பட்ட விலைகள் இன்னும் குறையும். ஷேமா நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன. புதிய ஈகிள்+ மற்றும் டஃப்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்த பின்னர் ஷேமா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான யோகேஷ் குமார் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "ஷேமா எலக்ட்ரிக் நிறுவனம் எதிர்கால இந்திய மொபைலிட்டியை ஆற்றல் திறன், நிலைத்தன்மை மற்றும் கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்துடன் ஒழுங்குப்படுத்துவதில் தீர்மானமாக உள்ளது. உலக இவி தினத்தில், நிறுவனம் இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மூலம் அதிவேக இரு சக்கர வாகனங்களுக்கு இருக்கும் தேவையை பூர்த்தி செய்வதில் மீண்டும் தனது உறுதியை நிலைநாட்டுகிறது" என்றார்.
ஷேமா எலக்ட்ரிக் நிறுவனம் இதுவரையில் 20,000 எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி பணிக்களுக்காக, இந்தியாவின் முக்கியமான இவி விநியோகஸ்தர்கள் மற்றும் சந்தைகள் உடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஷோரூம்களை கொண்டிருப்பது ஷேமா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு பிளஸ் பாயிண்ட் எனும்போது, அதேபோல் ஆஃப்டர்-சேல்ஸ் சர்வீஸ்களையும் இந்த நிறுவனத்தால் வழங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் நாளுக்கு நாள் வளர்ச்சிக் கண்டு வருகிறது. இந்த வளர்ச்சியை, ஷேமா எலக்ட்ரிக் போன்ற புது புது இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சந்தையில் களமிறங்குவது மேலும் வேகப்படுத்தும் என்பது உறுதி. இந்தியா 2030ஆம் ஆண்டிற்குள் சாலையில் இயங்கும் வாகனங்களில் குறைந்தது 30 சதவீதத்தை எலக்ட்ரிக்காக மாற்றும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








