உலக கோப்பையில் விளையாடுவதோடு சுப்மான் கில் செய்ய போகும் மற்றொரு சம்பவம்!! டிவிஎஸ் பைக்கை சொந்தமாக்கலாம்!
இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் வணிக விஷயமாக இந்தியாவின் முன்னணி 2-வீலர் பிராண்ட்டான டிவிஎஸ் மோட்டார் உடன் இணைந்துள்ளார். எதற்காக இந்த கூட்டணி? டிவிஎஸ் நிறுவனத்துக்காக சுப்மான் கில் என்ன செய்யவுள்ளார்? வாருங்கள் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்று டிவிஎஸ் மோட்டார். தமிழகத்தை சேர்ந்த இந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்துக்கு ஓசூருக்கு அருகே தொழிற்சாலை உள்ளது. டிவிஎஸ் பிராண்டில் இருந்து கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்ட புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் ரோனின் ஆகும்.

T-வடிவில் எல்இடி ஹெட்லேம்ப்கள், சமச்சீரற்ற வடிவில் ஸ்பீடோ மீட்டர் மற்றும் எக்ஸாஸ்ட் & மஃப்லர் டிசைன், செயின் கவர், 9-இன்ச் ஸ்போக் அலாய் சக்கரங்கள் மற்றும் பிளாக்டு டிரெட் டயர்கள் உள்ளிட்டவற்றுடன் டிவிஎஸ் ரோனின் தோற்றத்தில் தனித்துவமானதாக விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், டிவிஎஸ் பிராண்டில் கூட இத்தகைய தோற்றத்தில் எந்த மோட்டார்சைக்கிளும் இல்லை.
இத்தகைய மோட்டார்சைக்கிளில் புதிய வேர்ல்டு கப் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்றுவரும் 50-ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை பிரபலப்படுத்தும் வகையிலும், மேலும் அதன் மூலம் ரோனின் பைக்குகளின் விற்பனையை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்திலும் இந்த ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ரோனின் வேர்ல்டு கப் எடிசனை அனைவராலும் வாங்க முடியாது.
ரோனின் பைக்கை முன்பதிவு செய்தபின், அதனை டெஸ்ட் ரைடு செய்து பார்க்கும் வாடிக்கையாளர்களிடம் கிரிக்கெட் சம்பந்தமான சில கேள்விகள் டீலர்ஷிப் ஷோரூமில் கேட்கப்படும். அதற்கு சரியான பதில்களை கூறுவது மட்டுமின்றி, ஷோரூமில் கிடைத்த இந்த வித்தியாசமான அனுபவத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களை மென்ஷன் செய்து பதிவிடும் வாடிக்கையாளர்கள் புதிய ரோனின் வேர்ல்டு கப் எடிசனை பெறலாம்.
கிரிக்கெட் சம்பந்தப்பட்ட முயற்சியாக இது விளங்குவதால், இதனை மக்களிடத்தில் எடுத்துக் கூற வளர்ந்துவரும் இளம் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அணுகியுள்ளது. இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் - வணிகம் பிரிவின் முதன்மை அதிகாரி விமல் சும்ப்ளை கருத்து தெரிவிக்கையில், "டிவிஎஸ் ரோனின் பயணம் ஓர் வெற்றிடமான இடத்தில் இருந்து துவங்கியது.
ஒரு வருடத்தில் எங்களது மாடர்ன்-ரெட்ரோ பைக் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோரை தங்களது தனி வழியை மற்றும் கதையை எழுத வைத்துள்ளது. எங்களது லேட்டஸ்ட் நடவடிக்கை உடன் சுப்மான் கில் உடன் இணைந்துள்ளோம். எந்தவொரு திட்டமும் இல்லாமல், ரைடர்கள் தங்களது மனம் அழைத்து செல்லும் இடங்களுக்கு செல்லும் வகையில் அவர்களை கவர வேண்டும் என்பதுதான் எங்களது ஐடியா" என கூறினார்.
தற்சமயம் டிவிஎஸ் ரோனின் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.49 லட்சம், ரூ1.57 லட்சம் மற்றும் ரூ.1.69 லட்சமாக உள்ளன. சிங்கிள்-டோன், ட்யூயல்-டோன் மற்றும் டிரிபிள்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, இந்த டிவிஎஸ் பைக்கை சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் ஆப்ஷன்களிலும் வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிறைய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது, இந்தியாவின் மாடர்ன்-ரெட்ரோ ஸ்டைல் பைக் என டிவிஎஸ் நிறுவனம் ரோனினை பற்றி ஆஹா, ஓஹோ என கூறினாலும், மற்ற பைக்குகளுடன் ஒப்பிடுகையில் டிவிஎஸ் ரோனின் விற்பனை கொஞ்சம் சுமார் தான். இதனை அடுத்தே, புதிய முதலீட்டில் கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லை ரோனின் விளம்பரத்திற்கு டிவிஎஸ் அணுகியுள்ளது. பார்ப்போம், இதுவாவது சரிப்பட்டு வருமா என்று...


Click it and Unblock the Notifications








