இந்த தகவலுக்காக தான் இத்தனை நாளா காத்திட்கிட்டு இருந்தோம்! இப்ப அதிகாரப்பூர்வமாகவே சொல்லிட்டாங்க!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் எப்பொழுது வெளியாகும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது குறித்து அவ்வப்போது அப்டேட் வந்தாலும் தற்போது ஒரு முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அந்நிறுவனமே அதிகாரப்பூர்வமாக இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் அசைக்க முடியாத அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குகளை வாங்கவே ஆர்வமாக இருக்கின்றனர். இதனால் இந்நிறுவனத்தின் பைக்குகள் எல்லாம் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

இதுவரை இந்நிறுவனத்திற்கு போட்டியாக வேறு நிறுவனங்களே இல்லை என்று இருந்த பேச்சு தற்போது மாற துவங்கியுள்ளது. இந்நிறுவனத்திற்கு போட்டியாக தற்போது ஹார்லி டேவிட்சன், டிரையம் போன்ற நிறுவனங்கள் எல்லாம் தங்கள் குறைந்த விலை பைக்குகளை இந்தியாவில் வரிசையாக அறிமுகப்படுத்த துவங்கி விட்டனர்.
இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தப்போவதாக சமீபகாலமாக பேச்சுக்கள் இருந்து வந்தது. இப்படியாக ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தினால் அதை வாங்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த பைக் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இப்படியாக எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான ஸ்டார்க் பியூச்சர் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. எங்களின் இந்த இரு நிறுவனமும் சேர்ந்து தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க அடிப்படை வேலைகளை துவங்கியுள்ளனர். வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ சித்தார்த்தலால் சமீபத்தில் ஊடகங்கள் மத்தியில் பேசினார் அவர் பேசியதாவது: "ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்குகள் அறிமுகமாக இரண்டு ஆண்டுகளாவது ஆகும். நாங்கள் அதற்காக தீவிரமாக உழைத்து வருகிறோம். இதற்காக பல திட்டங்களை போட்டு வருகிறோம்.
தற்போது புரோட்டோடைப் பைக்குகளை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். நமக்கு இன்னும் நேரம் உள்ளது. மார்க்கெட்டிற்கு அரைகுறையான தயாரிப்புகளை வழங்க நாங்கள் விரும்பவில்லை. இதை எந்தவித கோளாறுகளும் இல்லாமல் தயாரித்து தரமான தயாரிப்பாக விற்பனைக்கு கொண்டுவர ஆலோசித்து வருகிறோம். இதற்கு 2 ஆண்டுகள் வரை நேரம் தேவைப்படும். "என்று கூறினார்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த இவி பிசினஸ்க்காக புதிதாக ஒரு வெர்டிகளை இன்டர்னலாக உருவாக்கியுள்ளது. ஏற்கனவே உள்ள ஊழியர்களை வைத்து இந்த புராஜெக்டை செய்யாமல் இதுக்காக தனியாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் இந்த பணிகளை செய்து வருகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் திட்டத்திற்கு நிறுவனம் சுமார் 1000 கோடி ரூபாயை பட்ஜெட்டாக ஒதுக்கியுள்ளது.
தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் 100 பேர் பிரத்தியேகமாக அதன் இவி தயாரிப்புக்காக மட்டுமே பணியாற்றி வருகின்றனர். தற்போது வாடிக்கையாளர்கள் மனநிலையை புரிந்து அவர்களுக்கு தேவையான பைக் என்ன என்பதை அறிந்து அதை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிப்புகளை உருவாக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் பைக்கில் மட்டுமல்லாமல் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம், மோட்டார் கண்ட்ரோலர் யூனிட் சிஸ்டம் மற்றும் அதன் துணைக் கருவிகளுக்கான டிசைன் ஆகியவற்றை செய்து வருகிறது. தற்போது முழு வேகத்தில் அதன் பணியை செய்து வருகிறது. 2026ம் ஆண்டு பைக் தயாராகிவிடும் என தெரிகிறது.
முதற்கட்டமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 1.5 லட்சம் எலெக்ட்ரிக் பைக் தயாரிக்கும் அளவிற்கான ஆலையை கட்டமைக்க முடிவு செய்து வருகிறது. இந்த ஆலையை மாடுலர் பிளான்ட் தொழில்நுட்பத்தில் உருவாக்குகிறது. இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் இதன் தயாரிப்புத் திறனை அதிகரிக்கவும் உதவும். இதனால் முன்னேற்பாடாகவே இந்த மாடுலர் பிளான்டை கட்டமைத்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் நிச்சயமாக மார்க்கெட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். தற்போது வரை இந்த செக்மென்டை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தான் கையகப்படுத்தி வருகின்றனர். அல்ட்ராவைலட், ஓபன் எலெக்ட்ரிக், டார்க் மோட்டார், ஆகிய நிறுவனங்கள் இதே செக்மெண்டில் பைக்குகளை இறக்கி உள்ளனர்.
அல்ட்ராவைலட் நிறுவனம் இதிலேயே பிரீமியம் செக்மெண்டில் பைக்குகளை களம் இறக்க தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ராயல் என்ஃபீல்ட் எலெக்ட்ரிக் பைக்குகளை எதிர்பார்க்க வேண்டாம் என நிர்வாகம் தரப்பில் சொல்லியுள்ளது. இருந்தாலும் பெட்ரோல் பைக்குகளின் அறிமுகங்கள் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கப் போகிறது.
ராயல் என்ஃபீல்டு அடுத்த அறிமுகமாக புல்லட் 350யின் புதிய அப்டேட்ட பைக்கை அறிமுகம் செய்யவிருக்கிறது. அடுத்ததாக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஹிமாலயன் 450 பைக்கின் அறிமுகம் இந்த ஆண்டு இறுதிக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 350, 450 மற்றும் 650 சிசி பைக்குகளின் அறிமுகத்தை தான் தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு அதிகமானாலும் பைக் செக்மெண்டில் பெரிய அளவில் விற்பனை வரவில்லை. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை. இது நடக்க 2 ஆண்டுகளாவது நேரம் தேவைப்படும். அதை ராயல் என்ஃபீல்டு பயன்படுத்தி. சரியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் நேரத்தில் தனது பைக்குகளை களம் இறக்கி விற்பனையை ஈர்க்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








