ஓலாவிற்கு நாள் குறிச்சிட்டாங்க! டிச 15ம் தேதி வரப்போகும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது சிம்பிள் டாட் ஒன் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் டிசம்பர் மாதம் 15-ம் தேதி இந்திய மார்க்கெட்டிற்கு அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அன்று முதல் இந்த எெலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங்கும் துவங்கப் போகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள அம்சங்கள் என்ன? விலை என்ன என்ற இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயார் செய்யும் ஒரு முக்கிய நிறுவனமாக பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் தற்போது சிம்பிள் ஒன் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி முக்கியமான நகரங்களில் மட்டும் விற்பனை செய்து வருகிறது. ஆனால் இதுவரை டெலிவரி துவங்கவில்லை. இந்நிறுவனம் தொடர்ந்து தனது தயாரிப்புகளை அதிகப்படுத்தவும் விற்பனையை பெருக்கவும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

simple dot one

இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லைன் அப்பில் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக சிம்பிள் டாட் ஒன் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் டிசம்பர் மாதம் 15-ம் தேதி அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகும் போதே இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும் நிலையில் சிம்பில் எனர்ஜி நிறுவனம் இந்த டாட் ஒன் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

simple dot one

இந்த ஸ்கூட்டரின் விலை குறித்த விபரங்கள் எல்லாம் டிசம்பர் 15-ம் தேதிக்கு பிறகு தான் வெளியாகும். ஆனால் தற்போது சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் 1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூபாய் 1.45 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது.

சிம்பிள் டாட் ஒன் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பிள் ஒன் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாராகும் அதே பிளாட்பார்மில் தான் தயாராக உள்ளது. அதனால் பார்ப்பதற்கு இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூடர்களும் ஒரே போல தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஸ்கூட்டர்களும் ஒரே மாதிரியான டிசைனில் வரவுள்ளது.

simple dot one

இருந்தாலும் டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சில அம்சங்கள் குறைவாக இருக்கலாம். இந்த ஸ்கூட்டரின் விலையை குறைப்பதற்காக சில முக்கியமான வெளிப்புறத் தோற்றம் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் மோட்டாரிலும் சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை 3.7கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 151 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நல்ல ரேஞ்ச் தருவதற்காக அதன் டயர் சிறப்பான முறையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோக சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சீட்டுக்கு கீழே சுமார் 30 லிட்டர் அளவுள்ள ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. மேலும் இதில் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதை செல்போன் ஆப் மூலம் கனெக்ட் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூடர்களைப் போல சிம்பிள் எனர்ஜி ஸ்கூட்டர்களிலும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி ஆப்ஷன் இருக்கிறது.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை தற்போது புக்கிங் நடந்து வந்தாலும் இதன் டெலிவரி வரும் ஜனவரி மாதம் தான் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக முக்கிய நகரங்களில் மட்டும் இரண்டு டெலிவரி துவங்கப்பட்ட பின்னர் இது படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பிள் டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை தற்போது மார்க்கெட்டில் உள்ள குறைந்த விலையில் ஸ்கூட்டர் கைப்பற்றுவதற்காக இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். மத்திய அரசு ஃபேம் 2 மானியத்தை குறைத்த பின்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எல்லாம் அதிகரித்துவிட்டது. இதை சமாளிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிம்பிள் எனர்ஜி நிறுவனம் குறைந்த விலையில் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தினால் ஓலா நிறுவனம் இதே போல அறிமுகப்படுத்தியுள்ள குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஏத்தர் நிறுவனமும் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த பல்வேறு திட்டங்களை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

More from DriveSpark

Article Published On: Tuesday, November 28, 2023, 7:00 [IST]
English summary
Simple dot one electric scooter launch dec 15
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X