சிம்பிள் டாட் எலெக்டரிக் ஸ்கூட்டரின் ஒரிஜினல் விலை இது தான்! புக் செய்தவர்களுக்கு ரூ40 ஆயிரம் லாபம்!
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக டாட் ஒன் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான விலை மற்றும் புக்கிங் குறித்த அறிவிப்புகள் எல்லாம் தற்போது வெளியாகி உள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை நான் குறித்த விரிவான அனைத்து விபரங்களையும் காணலாம் வாருங்கள்.
பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் சிம்பிள் எனர்ஜி. சிம்பிள் ஒன் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது இரண்டாவது தயாரிப்பாக டாட் ஒன் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த 15ஆம் தேதி அறிமுகமான இந்த எலெக்ட்ரிக் கூட்டத்திற்கு தற்போது விலை அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ99,999 என்ற அறிமுக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதற்கான புக்கிங் முடிந்துவிட்டது.

இந்த அறிமுக விலை என்பது முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான். அதுவும் அந்நிறுவனத்திடம் தற்போது ஷாக்கில் உள்ள ஸ்கூட்டர்களுக்கு மட்டுமே இந்த விலையில் விற்பனை செய்ய சிம்பிள் எனர்ஜி நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இந்த ஸ்கூட்டரின் விலை 1.39 லட்சமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்கூட்டரின் விலை ரூபாய் 40 ஆயிரம் வரை அதிகமாகிறது.
தற்போது முன்பதிவிற்கு சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்னுரிமை வழங்கப்பட்டு வரும் நிலையில் வரும் ஜனவரி முதல் டாட் ஒன் எலெக்டரிக் ஸ்கூட்டருக்கு இந்த முன்னுரிமை மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு வரும் ஜனவரி 27ம் தேதி முதல் மீண்டும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரான அதே பிளாட்ஃபார்மில் தான் தயாரிக்கப்படுகிறது.

இந்த எலெக்டரிக் ஸ்கூட்டரில் ஃபிக்சட் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 160 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என ஐடிசி சான்று வழங்கப்பட்டுள்ளது. இது மொத்தம் நான்கு விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர உள்ளது. அதன்படி நம்ம ரேட், பிரேசில் பிளாக், கிரேஸ் வைட் அசூர் ப்ளூ ஆகிய நிறங்களில் இந்த டாட் ஒன் எலெக்டரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது.
இந்த ஸ்கூட்டருக்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 750 வாட்ஸ் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லைட் எக்ஸ் மற்றும் பிரேசில் எக்ஸ் ஷேடுகளில் விற்பனைக்கு வருகிறது. தற்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெங்களூர் நகரிலேயே விற்பனை செய்யப்படுகிறது. படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எப்பொழுது எந்த நகரங்களுக்கு இது விரிவுபடுத்தப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டயர்கள் அதன் நீண்ட தூர ரேஞ்சிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 0-40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.77 நொடியில் பிக்கப் செய்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக முன் பக்கமும் பின் பக்கமும் 12 இன்ச் வீல் பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரி அளவை பொருத்தவரை 3.7 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 8.5 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இது 72 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கம்பைன் பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறது . இதில் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்கூட்டரில் டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் ஆப் கனெக்டிவிட்டி உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் சீட்டுக்கு கீழே 35 லிட்டர் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி இருக்கிறது. இந்த சிம்பிள் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெறும் ரூபாய் 1947 செலுத்தி புக்கிங் செய்யலாம். ஆனால் தற்போது புக்கிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிம்பிள் எனர்ஜி நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிகமான புக்கிங் வந்ததால் தற்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதன் புக்கிங் துவங்கும் போது அதிக விலையுடன் புக்கிங் துவங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏற்கனவே புக் செய்தவர்களுக்கு ரூபாய் 40 ஆயிரம் லாபம்.


Click it and Unblock the Notifications








