ஒரு தடவ சார்ஜ் ஏத்துனா சேலத்துல இருந்து பெங்களூர் போயிரலாம்! இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்ளோ தெரியுமா?
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது முதல் தயாரிப்பான சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் ரூ 1.45 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்கூட்டரின் டெலிவரி வரும் ஜூன் மாதம் 6ம் தேதி துவங்குகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் நுழையப்போவதாக அறிவித்தது. இந்த ஸ்கூட்டர் முதன் முறையாக 2021ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த ஸ்கூட்டர் மீது ஏற்பட்டது. மக்கள் பலர் இந்த ஸ்கூட்டரை வாங்க ஆர்வமாக இருந்தனர். இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கப்பட்ட நிலையில் இந்த ஸ்கூட்டரை மக்கள் ஆர்வமாக புக் செய்து வருகின்றனர்.

இந்த ஸ்கூட்டரை ஆன்லைனில் ரூ1947 கொடுத்து புக்கிங் செய்து கொள்ளலாம். இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் துவங்கி நீண்ட காலம் ஆகியும் இந்த ஸ்கூட்டரின் விற்பனை துவங்கப்படவில்லை. இதற்குக் காரணம் இந்த ஸ்கூட்டரின் தயாரிப்பைத் துவங்குவதிலிருந்த சிக்கல் தான். பின்னர் தமிழகத்தில் சூலகிரியில் இந்நிறுவனம் ஆலையை அமைத்து தனது தயாரிப்பைத் துவங்கியது. இந்நிலையில் இந்த ஸ்கூட்டர் இன்று வெற்றிகரமாக அறிமுகமாகியுள்ளது.
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஒன் எனப் பெயரிட்டுள்ளது. இதன் லுக்கை பலரைக் கவர்ந்தது. தற்போது மார்கெட்டில் உள்ள ஓலா, ஏத்தர் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்குப் போட்டியை ஏற்படுத்தும் வகையில் இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் நிறுவனம் 2018ம் ஆண்டு துவங்கப்பட்டு முதல் தயாரிப்பை அறிமுகப்படுத்த 5 ஆண்டுகள் வரை எடுத்துக்கொண்டது.

பேட்டரிபேக்: இந்த ஸ்கூட்டரில் 2 விதமான பேட்டரிபேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒன்று ஃபிக்ஸட் பேட்டரி, மற்றொன்று போர்ட்டபிள் பேட்டரி, இந்த பேட்டரி 5 கிலோவாட் ஹவர் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் ஃபிக்ஸட் பேட்டரியையும் ஃபோர்ட்டபிள் பேட்டரியையும் தனித்தனியாக சார்ஜ் போடுவது மூலம் விரைவாக சார்ஜை ஏற்றிக்கொள்ளலாம்.
மோட்டார் : இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் 8.5KW பவரை அதிகபட்சமாகவும், 4.5 KW பவரை தொடர்ந்தும் வெளிப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 75 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள. சிம்பிள் எனர்ஜி நிறுவனமே பேட்டரியை தயாரிக்கும் ஆலையையும் வைத்திருக்கிறது. அவர்களே தங்கள் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிக்கின்றனர்.
வேகம்: இந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சம் மணிக்கு 105 கி.மீ வேகத்தில் சீறிபாயும் திறன் கொண்டது. அது மட்டுமல்ல 0-40 கி.மீ வேகத்தை வெறும் 2.77 நொடிகளில் பிக்கப் செய்துவிடுகிறது. இந்த ஸ்கூட்டரில் எக்கோ, ரைடு, டேஷ், சோனிக் ஆகிய 4 டிரைவிங் மோட்கள் இருக்கிறது. இதில் சோனிக் என்பது அதிக பெர்ஃபாமென்ஸை தரக்கூடியது.
ரேஞ்ச்: இந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை இந்தியாவிலேயே நீண்ட ரேஞ்ச் கொண்ட ஸ்கூட்டர் முழு சார்ஜில் 212 கி.மீ ரேஞ்ச் தரும் என ஐடிசி சான்று வழங்கப்பட்டுள்ளது. ரியல் வேல்டில் ஓட்டிப்பார்க்கும் போது 200 கி.மீ ரேஞ்சையாவது தரும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
சார்ஜிங் : இந்த சிம்பிள் ஒன் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 0-80 சதவீத பேட்டரி சார்ஜ் ஆக 5 மணி நேரம் 54 நிமிடம் எடுத்துக்கொள்ளும். அதாவது ஃபிக்ஸட் பேட்டரி 3 மணி நேரம் 47 நிமிடமும் ஃபோர்டபிள் பேட்டரி 2 மணி நேரம் 7 நிமிடமும் எடுத்துக்கொள்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் ஒரு நிமிடம் சார்ஜ் போட்டால் 1.5 கி.மீ வரை பயணிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டயர்&பிரேக்குகள்: இதன் வீல்களை பொருத்தவரை அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. 90/90 ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கம் ஹைட்ராலிக் அக்யூடேடட் ட்ரிபிள் பிஸ்டன் கேலிபர் டிஸ்கும், பின்பக்கம் ஹைட்ராலிக் அக்குட்டேட்ட சிங்கிள் பிஸஅடம் கேலிபர் டிஸ்கும் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கை பொருத்தவரை 60-0 கி.மீ வேகத்தை வெறும் 27 மிட்டரில் கொண்டு வந்துவிடும்.
அளவுகள்: இந்த ஸ்கூட்டர் 1900 மிமீ நீளமும், 758மிமீ அகலமும், 1163 மிமீ உயரமும் கொண்டது. 1335 மிமீ வீல் பேஸ் கொண்டது. சீட் 796 மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மொத்தம் 134 கிலோ எடை கொண்டது. பூட் பகுதியில் 30 லிட்டர் எடை இருக்கிறது.
அம்சங்கள்: இந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பார்க்கிங் அசிஸ்டென்ட், ப்ளூடூத் 4.2, 4ஜி கனெக்டிவிட்டி, ஓவர் தி ஏர் அப்டேட், ஆன்ஃபோர்டு மேப் மற்றும் நேவிகேஷன், கனெக்டெட் மொபைல் ஆப், ரைடு ஸ்டாடிக்ஸ்டிக்ஸ், பேட்டரி, ரேஞ்ச், பெர்ஃபாமென்ஸ் மானிட்டரிங் சிஸ்டம், கால் மற்றும் மியூசிக், சிம்பிள் டேக், 7 இன்ச் டச் ஸ்கிரீன் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
வாரண்டி: இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், மோட்டார், பேட்டரிக்கு 3 ஆண்டுகள் அல்லது 30 ஆயிரம் கி.மீ வாரண்டி வழங்கப்படுகிறது. சார்ஜருக்கு 1 ஆண்டு அல்லது 10,000 கிமீ வரை வாரண்டி வழங்கப்படுகிறது சிம்பிள் டாக்கிற்கு ஒரு வருடம் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.
விலை: இந்த சிம்பிள் எனர்ஜி ஸ்கூட்டரின் விலையைப் பொருத்தவரை ரூ1.45 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது சாதாரண 4 கலருக்கான விலை தான் ஸ்பெல் எடிசன் கலர் ஸ்கூட்டருக்கு ரூ1.5 லட்சம் என விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது போ 7500 வாட்ஸ் சார்ஜை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இது வரும் ஆகஸ்ட் மாதம் முதல் விற்பனைக்கு வரும் இதன் விலை ரூ13 ஆயிரம் தனியாகச் செலுத்தி வாங்க வேண்டும்.
இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில் புக்கிங் செய்தவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 6ம் தேதி முதல் டெலிவரி துவங்குகிறது ஒவ்வொரு பேட்ஜாக இதன் டெலிவரி துவங்கவுள்ளது. அடுத்த 8-10 மாதங்களில் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 150 எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லுக்கிலும் சரி, அம்சங்கள், ரேஞ்ச், போன்ற விஷயங்களிலும் சிறப்பாக இருப்பதால் இது மார்கெட்டில் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும். ஓலா, ஏத்தர் ஆகிய நிறுவனங்களுடன் சிம்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளும் சிறப்பாக விற்பனையாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications








