300 KM Range Electric Scooter: ஓலா, ஏத்தருக்கு போட்டியாக களம் இறங்கப்போகும் சிம்பிள் ஒன்!

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் சிம்பிள் எனர்ஜி. இந்நிறுவனம் சிம்பிள் ஒன் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. முதன் முதலாகக் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இந்நிறுவனம் தனது மாடல் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. அதன்பின் 1.5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை ஒரு ஸ்கூட்டர் கூட வெளியாகவில்லை.

ஆனாலும் இந்நிறுவனம் அவ்வப்போது தனது ஸ்கூட்டர் தயாரிப்புகளுக்கான அப்டேட்களை வெளியிட்டு வந்தது. பெங்களூருவை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனம் துவங்கப்பட்டாலும், இந்நிறுவனம் தனக்கான முதலீட்டாளர்கள் கிடைத்த பின்பு தமிழகத்தின் சூலகிரி பகுதியில் தான் தனது முதல் தயாரிப்பு ஆலையைத் துவங்கியுள்ளது. தற்போது அந்த ஆலையில் இந்த ஸ்கூட்டர் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

முழு சார்ஜில் 300 கிமீ பயணிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! விலை ரொம்ப கம்மி! ஓலா, ஏத்தர் நிலைமை என்ன ஆகுமோ?

இதற்காக இந்நிறுவனம் சுமார 20 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணத்தை முதலீடாகப் பெற்றது. இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங்கை இந்நிறுவனம் துவங்கிவிட்டது. சுமார் 1 லட்சம் பேர் இந்த ஸ்கூட்டரை புக்கிங் செய்யத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் இந்நிறுவனம் வரும் ஏப்ரல் மாத இறுதியில் இந்த ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதுவும் முதற்கட்டமாகப் பெங்களூருவில் இந்நிறுவனம் தனது ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்ட வர முடிவு செய்துள்ளது.

படிப்படியாக இதை மாற்ற நகரங்களுக்கும் விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ள நிலையில் இந்த டெலிவரியில் சற்றுத் தொய்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரான ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்படலாம். இந்நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு காட்சிப்படுத்திய ஸ்கூட்டருக்குள் தற்போது உள்ள ஸ்கூட்டருக்கும் உருவ ஒற்றுமை ஒரே மாதிரியாக இருந்தாலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் முதலில் இந்த ஸ்கூட்டரை காட்சிப்படுத்தும் போது வெறும் ரூ1.10 லட்சத்திற்கு இந்த ஸஅகூட்டர் விற்பனைக்கு வரும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த ஸ்கூட்டர் விலை பார்த்தால் ஏத்தர் 450 எக்ஸ், ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை விடக் குறைவாக இருப்பதால் மக்கள் அதிகம் விரும்புவார்கள் எனக் கூறலாம். ஆனால் இந்நிறுவனம் டாப் வேரியன்ட் ஸ்கூட்டர் ஒன்றையும் தயாரிக்கப்போவதாகக் கடந்த 2022ம் ஆண்டு அறிவித்தது.

300 கி.மீ ரேஞ்ச்சில் இந்த ஸ்கூட்டர் தயாராகவுள்ளது. இந்த ஸ்கூட்டர் ரூ1.45 லட்சம் என் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த விலையில் ஸ்கூட்டர் அறிமுகமாகும் போது மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள புதிய அம்சங்கள், உதிரிப் பாக விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஸ்கூட்டரின் விலையும் உயரும் என எதிர்பார்க்கலாம்.

இந்த சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை பொருத்தவரை 4.8 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது 236 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. ஆனால் ட்ரூ ரேஞ்சாக 203 கி.மீ ரேஞ்சை வழங்கும் என எதிர்பார்க்கலாம். இரண்டாவது பேட்டரி பேக்கை பொருத்தும் பட்சத்தில் 300 கி.மீ ரேஞ்ச் கூட கிடைக்கும். இதற்காக இந்த ஸ்கூட்டரில் 8.5 கிலோ வாட் மோடடார் பொருத்தப்பட்டுள்ளது. இது 72 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இது போக இந்த ஸ்கூட்டரில் அனைத்து லைட்களும் எல்இடி லைட்களாகவும், 7 இன்ச்சில் 4ஜி மற்றும் ப்ளூ டூத் இணைப்பில் வேலை செய்யும் டச் ஸ்கிரீன் டிஜிட்டல் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. இது காலிங் மற்றும் மியூசிக் கண்ட்ரோலையும் வழங்கும். இது போக இதில் ஆன்போர்டு நேவிகேஷன், ரைடிங் மோடு உள்ளிட்ட கண்ட்ரோல்கள் கிடைக்கும். இந்த ஸ்கூட்டர் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யக்கூடியது.

இந்த சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரவுள்ளது. அசூர் ப்ளூ, ப்ரேசன் பிளாக், க்ரேஸ் ஒயிட், மற்றும் நம்ம ரெட் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தால் மார்கெட்டில் ஏத்தர் மற்றும் ஓலா நிறுவன ஸ்கூட்டர்களுடன் போட்டியிடும். இந்த ஸ்கூட்டர் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஏற்கனவே மார்கெட்டில் விற்பனையாகி வரும் ஓலா, ஏத்தர் போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும். இருந்தாலும் மக்கள் சமீபகாலமாக பெட்ரோல் ஸ்கூட்டரை விட்டுவிட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிவருவதால் அவர்கள் தங்களுக்கு ஏற்ற வாகனங்களைத் தேர்வு செய்ய இது ஒரு ஆப்ஷனாக இருக்கும்.

விரைவில் அதிக ஃபெர்பாமென்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியச் சாலைகளில் அதிகம் காணலாம். ஸ்கூட்டர் செக்மெண்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆதிக்கம் செலுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதே நேரம் இன்னும் சில காலங்களில் இதே போன்ற டிரண்டை பைக்குகளிலும் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 24, 2023, 9:32 [IST]
English summary
Simple energy plans to launch one electric scooter by april
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+