கம்மி ரேட்ல 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரப்போகுது! சிம்பிள் என்ர்ஜி வேற லெவல்ல பிளான் பண்ணீட்டாங்க!
ஓலாவிற்கு போட்டியாக சிம்பிள் எனர்ஜி நிறுவனம் குறைந்த விலையில் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஸ்கூட்டர்கள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனச் சந்தையில் ஸ்கூட்டர்களுக்கு தான் மிகப்பெரிய மவுசு இருக்கிறது. ஏகப்பட்ட மக்கள் புதிதாக ஸ்கூட்டர் வாங்க நினைக்கும் போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் ஒரு ஆப்ஷனாக வைத்திருக்கின்றனர். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருப்பது ஓலா நிறுவனம் தான்.

இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏகப்பட்ட பேர் வாங்கி வருகின்றனர். ஓலாவிற்கு போட்டியாக மார்க்கெட்டில் சிம்பிள் எனர்ஜி நிறுவனமும் கடந்த மாதம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான சிம்பிள் 1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. நீண்ட நாள் இழுபறிக்கு பின்னர் இந்த அறிமுகம் நடந்தது.
இந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் 1.45 லட்சம் மற்றும் 1.5 லட்சம் என்று கலர் ஸ்கீமிற்கு ஏற்ப விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களம் இறக்க தற்போது முடிவு செய்துள்ளது.

ஓலா நிறுவனமும் குறைந்த விலையில் ஓலா ஏர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி அதை ஜூலை மாதம் முதல் விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது. ஓலாவிற்கு போட்டியாக சிம்பிள் என்ர்ஜி நிறுவனம் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது.
நமக்குக் கிடைத்த தகவலின் படி சிம்பிள் எனர்ஜி நிறுவனம் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூபாய் 1 லட்சம் மற்றும் ரூபாய் 1.2 லட்சம் ஆகிய விலைகளில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். இதில் முக்கியமாக சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி பேக்கிங் திறன் குறைவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் இந்த ஸ்கூட்டரின் முழு சார்ஜில் செல்லக்கூடிய ரேஞ்சும் குறைவாக இருக்கும். அதேநேரம் ஸ்கூட்டரில் உள்ள அம்சங்களும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளிப்புறத் தோற்றத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் வரப்போகிறது என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் பார்க்க சிம்பிள் ஒன் தோற்றத்தில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் வெளியிட உள்ள குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் உள்ள டிவிஎஸ் ஐகியூப், ஏத்தர் 450 எக்ஸ், மற்றும் ஓலா எஸ் ஒன் ஏர் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனையாக உள்ளது. இந்தக் குறைந்த விலைக்கு ஸ்கூட்டர்களுக்காக ஏகப்பட்ட மக்கள் காத்திருக்கின்றனர் இதன் அறிமுகம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை 8.5 கிலோ வாட் பவரை உட்சபட்சமாகவும் 4.5 கிலோ வாட் பவரை தொடர்ந்தும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் 72 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரில் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் கண்ட்ரோலர் ஐபி 67 தூசு மற்றும் தண்ணீர் ப்ரூப் கொண்டது.
இந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சம் 105 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். அதே நேரம் 0-40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.77 நொடியில் எட்டி பிடித்து விடும். இந்த ஸ்கூட்டரில் மொத்தம் எக்கோ, ரைட்,டேஷ் மற்றும் சோனிக் ஆகிய நான்கு டிரைவிங் மோடுகளில் இயங்கும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சிட்டி பயன்பாடு மற்றும் முதியவர்கள் இந்த ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தான் அதிகம் விரும்புகின்றனர். இதனால் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்போது இதன் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








