“30 வருஷத்துக்கு முன்ன கல்யாணம் ஆக வேண்டியவ...”- சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருவழியா டெலிவிரிக்கு தயார்

டெலிவிரிக்கு தயார் என்பதுபோல் சிம்பிள் ஒன் (Simple One) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புதிய படம் ஒன்று சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து வெளியாகியுள்ளது. அத்துடன், இணையத்தில் வெளியாகியுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரோடு டெஸ்டிங் ஸ்பை படத்தையும் இனி பார்க்கலாம்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். 2021 ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான எஸ்1 அறிமுகப்படுத்தப்பட்டது. சரியாக, இந்திய சுதந்திர தினமான அதே நாளில்தான் பெங்களூரை சேர்ந்த மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான சிம்பிள் எனர்ஜியும் தனது ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

simple energy racking up one

மேலும் அதே தினத்தில் ரூ.1947 என்ற இந்திய சுதந்திரம் பெற்ற ஆண்டை குறிக்கும் வகையிலான தொகையில் முதற்கட்ட முன்பதிவுகளும் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு துவங்கப்பட்டன. ஆனால் இப்போது வரையில் ஒரு சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கூட அதனை முன்பதிவு செய்த வாடிக்கையாளருக்கு சென்றடையவில்லை. ஏனெனில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்குதான் இன்னும் டெலிவிரியே துவங்கப்படவில்லையே.

வருகிற 2023 மே 23ஆம் தேதியில் இருந்து ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டெலிவிரிகள் துவங்கப்பட உள்ளன. இதனை சமீபத்தில்தான் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில், ஓசூரில் உள்ள சிம்பிள் எனர்ஜியின் தொழிற்சாலையில் அசெம்பிள் லைனில் இருந்து, உற்பத்தி பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

simple energy racking up one

சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்த அறிவிப்பையும் மே 23ஆம் தேதியில் எதிர்பார்க்கிறோம். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போல் இல்லாமல், சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கூர்மையான லைன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்கூட்டரின் தோற்றம் மிகவும் மாடர்ன் தரத்தில் உள்ளதை தற்போது தொழிற்சாலையில் இருந்து வெளியாகியுள்ள படத்தில் கூட காணலாம்.

இதற்கேற்ப, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டர்ன் இண்டிகேட்டர்கள் கூட எல்இடி-ஆக வழங்கப்பட்டுள்ளன. சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் நீக்க முடியாத பேட்டரி 4.8kWh திறனில் வழங்கப்படுகிறது. அத்துடன், நீக்கக்கூடிய வகையிலும் இரு பேட்டரிகள் வழங்கப்பட உள்ளன. மொத்தமாக 6.4 kWh திறன் ஆகும். இவற்றை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு, அதிகப்பட்சமாக 236கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது, சிம்பிள் எனர்ஜி நிறுவனம்.

simple energy electric scooter spotted testing

சிம்பிள் எனர்ஜியின் தொழிற்சாலையில் இருந்து படம் வெளியாகியுள்ள இதேவேளையில், பொது சாலையில் சோதனை ஓட்டத்தின் எடுக்கப்பட்ட படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. பைக்வாலே செய்தித்தளத்தின் மூலம் கிடைத்துள்ள இந்த ஸ்பை படத்தில் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுவதுமாக மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது. அநேகமாக இதுதான் அறிமுகத்திற்கு முன்பாக சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் கடைசி சோதனை ஓட்டமாக இருக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போதைக்கு அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக உள்ளது. இதனுடன் அப்போதே அறிமுகமாகி இருந்தால், ஒருவேளை சிம்பிள் ஒன் தற்சமயம் சிறந்த விற்பனை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்திருக்கலாம். குறைந்தப்பட்சம், ஓலா எஸ்1 -இன் ஆதிக்கத்தை குறைத்து இருக்கலாம். இப்போது கூட ஒன்னும் கெட்டுப் போகவில்லை அறிமுகத்திற்கு பிறகு ஓலா எஸ்1 -இன் ஆதிக்கத்தை சிம்பிள் ஒன் உடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 18, 2023, 17:01 [IST]
English summary
Simple energy racking up one electric scooters for delivery
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X