சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்கூட்டரின் பெயர் இதுதானா! என்ன பெயர்ன்னு கேட்டா ஆடி போயிடுவீங்க!
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காக டாட் ஒன் என்ற பெயரை டிரேட் மார்க் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மார்க்கெட் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களை எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் தற்போது விற்பனையாக துவங்கி விட்டது. பலர் இந்த ரக வாங்கி வருகின்றனர்.

தற்போது ஓலா நிறுவனம் தான் இந்தியாவிலேயே அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. ஓலாவிற்கு போட்டியாக ஏத்தர், டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களும் போட்டியிட்டு வரும் நிலையில் இந்த மார்கெட்டிற்கு டஃப் கொடுக்க புதிதாக சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் ஓலாவை தொடர்ந்து பல நிறுவனங்களும் தங்களது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வரிசையாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஓலா நிறுவனம் எஸ்1 ஏர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், ஏத்தர் நிறுவனம் 450 எஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் தங்களது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக சிம்பிள் எனர்ஜி நிறுவனம் புதிதாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தப் போவதாக பேச்சு எழுந்துள்ளது. இதற்காக சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தற்போது சிம்பிள் டாட் ஒன் மற்றும் டாட் ஒன் என்ற பெயர்களுக்கு டிரேட் மார்க்கை பெற்றுள்ளது.
இந்த சிம்பிள் டாட் ஒன்ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியை ஒட்டி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த சிம்பிள் டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜர் 180 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட குறைவான பேட்டரியில் குறைந்த விலையில் விற்பனைக்கு வரலாம்.

தற்போது சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தில் சிம்பிள் ஒன் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது ரூபாய் 1.45 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 1.10 லட்சம் என்ற விலையில் தான் முதலில் அறிமுகமானது ஆனால் ஃபேம் 2 மானியம் குறைக்கப்பட்டதன் காரணமாக இந்த கூட்டத்தின் விலை ஏறியுள்ளது.
சிம்பிள் டாட் ஒன் மற்றும் டாட் ஒன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 8.5 கிலோ வாட் மோட்டாரை கொண்ட ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 4.5 கிலோவாட் பவரையும் 72 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது ஸ்கூட்டர் 0- 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.77 நொடியில் எட்டி பிடிக்கும்.
இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 15 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்ட ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சிம்பிள் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்து வரும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 212 கிலோ மீட்டர் ரேஞ்ச் தரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது இதில் 5 கிலோ வாட் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் டாட் ஒன் மற்றும் டாட் ஒன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தமிழ்நாட்டில் சிம்பிள் எனர்ஜி நிறுவனத்திற்கு சொந்தமான சூழகிரி ஆலையில் வைத்து தான் தயாரிக்க உள்ளது எந்த ஆளை ஆண்டிற்கு பத்து லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
சிம்பிள் இன்ஜின் நிறுவனம் இதுவரை சிம்பிள் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் க்கு ஒரு லட்சம் பேர் புக் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொடுத்து அறிவிப்பு வெளியாகி உள்ளதால் இனி அந்த சிம்பிள் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன புக்கிங் குறையும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது சிம்பிள் எனர்ஜி நிறுவனம் பெங்களூரில் மட்டுமே தனது சிம்பிள் 1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி செய்து வருகிறது. மற்ற நகரங்களுக்கான டெலிவரி அடுத்த அடுத்த மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். இதற்கிடையில் சிம்பிள் டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானால் அதன் விற்பனையும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிம்பிள் எனர்ஜி நிறுவனம் ஓலா,ஏத்தர் போன்ற நிறுவனங்களைப் போல தரமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அறிமுகமான போதே பலரின் நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராகி விட்டனர். தற்போது சிம்பிள் எனர்ஜி நிறுவனம் பெரிய அளவில் விற்பனையை துவங்காவிட்டாலும் வருங்காலத்தில் மார்க்கெட்டில் கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications









