சிம்பிள் ஒன் vs ஓலா எஸ்1 ப்ரோ vs ஏத்தர் 450எக்ஸ்.. மூனுமே பெஸ்டானதுதான்.. ஆனா மூனுல எது பெஸ்ட்?..

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் சிம்பிள் எனெர்ஜி. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு போட்டி அளிக்கும் விதமாக ஒன் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் அது விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை ஓலா எஸ்1 ப்ரோவிற்கு மட்டுமல்ல ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் போட்டியாக அமைந்திருக்கின்றது.

இந்த மூன்று இ-ஸ்கூட்டர்களையும் ஒப்பீடு செய்து அதுகுறித்த தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். விலை, ரேஞ்ஜ், மின்சார மோட்டார் மற்றும் சிறப்பம்சங்கள் என அனைத்தையும் ஒப்பீடு செய்தே தகவலை வழங்கி உள்ளோம். மூன்றில் எது பெஸ்ட்டான தயாரிப்பு என்பதை வெளிக்காட்டும் விதமாகவும் இந்த தகவலை வழங்கியுள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Simple one vs ola s1 pro performance

சிங்கிள் சார்ஜில் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்? சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் தெரிவித்திருப்பதன்படி, அதன் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 212 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். இதைவிட குறைவான ரேஞ்ஜ் திறனை வழங்கக் கூடியதாகவே இதன் போட்டி மாடல்களான ஓலா எஸ்1 ப்ரோ மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் ஆகிய இரண்டும் இருக்கின்றன.

ஓலா எஸ்1 ப்ரோ ஓர் முழு சார்ஜில் 181 கிமீ ரேஞ்ஜையும், ஏத்தர் 450எக்ஸ் ஓர் முழு சார்ஜில் 108 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். இந்த ரேஞ்ஜ் திறன்களுடன் ஒப்பிடுகையில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே நாட்டின் மிக அதிக ரேஞ்ஜை தரும் இ-ஸ்கூட்டர் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

Simple one vs ola s1 pro motor

மின் மோட்டார் பவரில் எது பெஸ்ட்? சிம்பிள் நிறுவனம் அதன் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மணிக்கு 105 கி.மீ வேகத்தில் சீறிபாயும் திறன் கொண்ட மின் மோட்டாரை வழங்கி இருக்கின்றது. இந்த மோட்டார் வெறும் 2.77 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கி.மீ., வேகத்தைத் தொடும் திறனையும் கொண்டிருக்கின்றது.

இந்த அதி-வேக திறனுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 8.5 kW பவரை வெளியேற்றும் மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மின்சார மோட்டார் விஷயத்தில், குறிப்பாக, அதிக வேகத்தில் செல்வதில் ஓலா எஸ்1 ப்ரோவிடம் சிம்பிள் ஒன் தோற்றுவிட்டது என கூறலாம். ஆமாங்க, ஓலா எஸ்1 ப்ரோவின் டாப் ஸ்பீடு மணிக்கு 115 கிமீ ஆகும்.

அதேவேளையில், இது 0-40 கிமீ வேகத்தை எட்ட 3.9 செகண்டுகளை எடுத்துக் கொள்ளும். இந்த விஷயத்தில் சிம்பிள் ஒன்னிடம் ஓலா எஸ்1 ப்ரோ தரமான அடியை வாங்கி இருக்கின்றது. இந்த இரண்டையும் காட்டிலும் மிகக் குறைவான வேக திறன் கொண்ட ஏத்தர் 450எக்ஸ் இருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். மேலும், இது 0-40 கிமீ வேகத்தை எட்ட வெறும் 3.3 செகண்டுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும். இந்த விஷயத்தில் ஓலா எஸ்1 ப்ரோ, ஏத்தர் 450 எக்ஸ் இடம் அடி வாங்கிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பேட்டரி பேக் விபரம்: சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2விதமான பேட்டரி பேக் வழங்கப்படுகின்றது. ஒன்று நிரந்தரமாக பொருத்தப்பட்ட நிலையில் இருக்கும், மற்றொன்று போர்டபிள் வசதிக் கொண்டது. 5kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே வழங்கப்பட்டுள்ளது. இது ஓர் லித்தியம்-அயன் பேட்டரி ஆகும். ஐபி67 தர சான்று பெற்றது. ஓலா எஸ்1 ப்ரோ மாடலில் 3.5kWh பேட்டரி பேக்கும், ஏத்தர் 450எக்ஸ் தேர்வில் 2.6kWh பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Simple one vs ola s1 pro special feature

சிறப்பம்சங்கள் விபரம்: சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பார்க்கிங் அசிஸ்ட், ப்ளூடூத் 4.2, 4ஜி எல்டிஇ இணைப்பு வசதி, ஓவர் தி ஏர் அப்டேட், ஆன்ஃபோர்டு மேப் மற்றும் நேவிகேஷன், ஆவணங்களை சேகரித்து வைத்துக் கொள்ளும் வசதி என எக்கசக்க வசதிகள் இந்த இ-ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, கனெக்டெட் மொபைல் ஆப், கால் மற்றும் மியூசிக்கை எஞ்ஜாய் செய்யும் வசதி ஆகியவையும் சிம்பிள் ஒன்னில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக 7 அங்குல டச் வசதிக் கொண்ட திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஐஓஸ் மற்றும் ஆன்ட்ராய்டு இணைப்பு வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோல், சிறப்பம்சங்கள் ஏத்தர் 450எக்ஸ் மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகியவையும் மிக சிறந்தவையாகக் காட்சியளிக்கின்றன. இரண்டிலும், ஸ்மார்ட் திரை ஜிபிஎஸ் வசதியுடன் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர, செல்போன் இணைப்பு போன்ற வசதிகளும் அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன. சொற்பமான அளவிலேயே இந்த மூன்றுக்கும் இடையில் சிறப்பம்சங்கள் விஷயத்தில் வித்தியாசம் தென்படுகின்றது.

Simple one vs ola s1 pro storage

ஸ்டோரேஜ் விபரம்: சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 30 லிட்டர் வரையில் பொருட்களை வைத்துக் கொள்ள முடியும். இந்த விஷயத்தில் ஓலா எஸ்1 ப்ரோ இடம் இந்த ஸ்கூட்டர் தோல்வி அடைந்து நிற்கின்றது. இதன் ஸ்டோரேஜ் அளவு 36 லிட்டர் ஆகும். இவை இரண்டைவிட குறைவான ஸ்டோரேஜையே ஏத்தர் 450 எக்ஸ் கொண்டிருக்கின்றது. அதன் ஸ்டோரேஜ் வசதி 22 லிட்டர் ஆகும்.

சார்ஜிங் டைம்: சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டு சார்ஜரை பயன்படுத்தி 0-80 சதவீதம் சார்ஜை வெறும் 5.54 மணி நேரங்களில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். அதேவேளையில், ஏத்தர் 450 எக்ஸ்க்கு அதிகபட்சமாக 4 மணி நேரங்களும், ஓலா எஸ்1 ப்ரோவிற்கு 5 மணி நேரங்களும் தேவைப்படும். ஃபாஸ்ட் சார்ஜ் மையங்களைப் பயன்படுத்தும்போது இதைவிட அதிக வேகத்தில் முழு சார்ஜ் அளவை எட்டிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விலை ஒப்பீடு: சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 1.45 லட்சம் தொடங்கி ரூ. 1.5 லட்சம் என்கிற விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எஸ்1 ப்ரோவின் விலை ரூ. 1.24 லட்சம் ஆகும். ஏத்தர் 450 எக்ஸ் ரூ. 1,16,379 தொடங்கி ரூ. 1,46,743 வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். விலையைப் பொருத்த வரை ஓலா எஸ்1 ப்ரோ பெஸ்டானதாக இருக்கின்றது. அதேவேளையில், ரேஞ்ஜ் மற்றும் பிற சிறப்பு விஷயங்களில் சிம்பிள் எனெர்ஜி நிறுவனத்தின் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பானதாகக் காட்சியளிக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 23, 2023, 18:55 [IST]
English summary
Simple one electric scooter compared with rivals
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X