ஒரு தடவ சார்ஜ் போட்டாலே இவ்ளோ தூரம் ஓடுமா? உலக நாடுகளை அண்ணாந்து பாக்க வைத்த இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Simple One Electric Scooter), வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் முதலில் கர்நாடக மாநிலம் பெங்களூர் (Bangalore) நகரில் தொடங்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு டெலிவரி பணிகள் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என சிம்பிள் எனர்ஜி (Simple Energy) நிறுவனம் அறிவித்துள்ளது.

பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை (Price) 1.45 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பெங்களூர் எக்ஸ் ஷோரூம் விலையாகும். சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் (Bookings) குவிந்திருப்பதாக சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் (Range) 212 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 212 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என சிம்பிள் எனர்ஜி நிறுவனம் கூறியுள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம்.

பொதுவாக இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ரேஞ்ச் மிகவும் குறைவாக உள்ளது. எனவே ஒரு நகரத்திற்கு உள்ளே அருகில் உள்ள இடங்களுக்கு சென்று வருவதற்கு மட்டும்தான் அவற்றை பயன்படுத்த முடிகிறது. ஆனால் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் மிகவும் அதிகம்.
எனவே அதனை வெளியூர் பயணங்களுக்கும் கூட பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு ஈரோட்டில் இருக்கும் ஒருவர், திருப்பூர், சேலம் அல்லது கரூர் போன்ற அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று வருவதற்கு கூட சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்த முடியும். சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் அதிகம் என்பதுடன், இது வேகமாகவும் செயல்படும்.
அதாவது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.77 வினாடிகளை மட்டுமே சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எடுத்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பம்சங்கள் காரணமாக சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் சாதிக்கும் என சிம்பிள் எனர்ஜி நிறுவனம் நம்புகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக ரேஞ்ச் உடன் கூடிய ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேண்டும் என நினைப்பவர்களுக்கு சிம்பிள் ஒன் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இது இந்திய வாடிக்கையாளர்களின் மிக நீண்ட கால காத்திருப்பிற்கு பின்பு விற்பனைக்கு வந்துள்ள தயாரிப்பு என்பதால், போட்டி நிறுவனங்களுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








