சிங்கிள் சார்ஜில் 300 கிமீ ஓடும்! விலை இவ்ளோதானா! மத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எல்லாத்தையும் கதற விட போகுது!

கர்நாடக மாநிலம் பெங்களூர் (Bangalore) நகரை சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சிம்பிள் எனர்ஜி (Simple Energy). இந்த நிறுவனத்தின் சிம்பிள் ஒன் (Simple One எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், வரும் மே 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழு வீச்சில் உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழ்நாட்டில்தான் (Tamil Nadu) அமைந்துள்ளது. ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட சூளகிரி பகுதியில், இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

Simple One Production Starts

இங்குதான் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்தியாவில் அதிக ரேஞ்ச் (Range) வழங்க கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 4.8 kWh பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 236 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஸ்வாப்பபிள் பேட்டரி (Swappable Battery), அதாவது மாற்ற கூடிய பேட்டரி ஆப்ஷனும் இருக்கிறது. எனவே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 300 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம் ஆகும்.

Simple One Electric Scooter

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் 2.7 வினாடிகளில் எட்டி விடும். அத்துடன் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை. முழு எல்இடி லைட்கள், ப்ளூடூத் ஆகியவற்றை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்களாக குறிப்பிடலாம்.

அத்துடன் ஈக்கோ, டேஷ், ரைடு மற்றும் சோனிக் என சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 4 ரைடிங் மோடுகளும் இடம்பெற்றுள்ளன. சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் மோனோ ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2 சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஓலா எஸ்1 (Ola S1) மற்றும் ஏத்தர் 450 (Ather 450) வரிசை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடனும் இது விற்பனையில் போட்டியிடும்.

வரும் காலங்களில் இந்திய சந்தையில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு சிம்பிள் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில், சிம்பிள் எனர்ஜி நிறுவனம் மிக முக்கியமான இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்டு மாடலின் விலை (Price) 1.10 லட்ச ரூபாய் எனவும், எக்ஸ்ட்ரா ரேஞ்ச் மாடலின் விலை 1.45 லட்ச ரூபாய் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வரும் மே 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, விலைகளில் மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனினும் கிட்டத்தட்ட இதே அளவிலான விலையில்தான் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேஞ்ச் மற்றும் வசதிகள் ஆகிய அம்சங்களை கவனத்தில் கொள்ளும்போது, இந்த விலைக்கு இது மிகவும் சிறப்பான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றே கருத தோன்றுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 7, 2023, 22:38 [IST]
English summary
Simple one electric scooter production starts price range features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+