பெட்ரோல் டூவீலர்கள் விலை ராக்கெட் வேகத்துல ஏறப்போகுது! புதுசா ஒரு வரியை கொண்டு வர வாய்ப்பு இருக்குது!
இந்தியாவில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்குப் பசுமை வரி விதிக்க வேண்டும் என எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று இந்த கோரிக்கையை அந்த கூட்டமைப்பு மத்திய அரசுக்கு வைத்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகமாகி வருகிறது. பூமி வெப்பமடைவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பெட்ரோல் டீசல் வாகனங்களில் பயன்பாட்டைக் குறைப்பது. அதற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மக்களுக்குச் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு குழுவை உருவாக்கியுள்ளனர்.
இந்தக் குழுவிற்கு சொசைட்டி ஆப் மேனுஃபேக்சர் ஆஃப் எலெக்ட்ரிக் வெஹிகிள் என பெயரிட்டுள்ளனர். இவர்கள் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்குப் பசுமை வரியை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் எழுதியுள்ளதாவது: "இந்தியாவில் ஹெவி இண்டஸ்ட்ரி சமச்சகம் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கான மானியத்தைக் குறைத்து உள்ளதை நீங்கள் அறிவீர்கள். இது இந்தியாவில் விற்பனையாகும் எலெக்ட்ரிக் டூவீலர்களின் விலையை உயர்த்தி விடும். இதனால் இந்தியாவில் தற்போது பரவிவரும் எலெக்ட்ரிக் டூவீலர் டிரெண்ட் சரியவும் வாய்ப்பு உள்ளது.
இதற்குப் பதிலாக இந்தியாவில் விற்பனையாகவும் பெட்ரோல் டூவீலர்களுக்கு பசுமை வரியை வைப்பதன் மூலம் அதன் மூலம் ஒரு வருவாயை எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு மானியங்களாக வழங்கலாம் என நினைக்கிறோம். இந்தியாவில் பெட்ரோல் டூவீலர்கள் ஒவ்வொரு கிலோமீட்டர் பயணத்திற்கும் 300 கிராம் அளவிலான கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன.
கடந்த 2022-ம் நிதி ஆண்டில் மட்டும் மொத்தம் ஒரு கோடி 58 லட்சத்து 62 ஆயிரத்து 087 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன ஒவ்வொரு வாகனமும் தினமும் சராசரியாக 20 கிலோமீட்டர் ஓடுகிறது எனக் கணக்கிட்டால், ஓராண்டில் சுமார் 100 மில்லியன் கிலோ அளவிற்கான கார்பன் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது.
இதனால் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு பெரிய அளவில் ஏற்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்த மாசு ஏற்படுவதை வெகுவாக குறைக்கின்றன. இதனால் பெட்ரோல் வாகனங்களுக்குப் பசுமை வரியை விதித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியமாக வழங்கலாம். குறைக்கப்பட்ட மானியத்தை மீண்டும் உயர்த்திவிட முடியும்.
இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல் வாகனங்களின் பயன்பாடு குறைந்து எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்பாடு அதிகமாகும். பெட்ரோல் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு வெகுவாக குறையும். இந்த வரி இந்தியாவின் கொள்கைக்கு உதவும்"எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த கடிதத்தை அவர்கள் நேரடியாகப் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் இருக்கிறது. மக்கள் பெட்ரோல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்றால் பெட்ரோலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களும் இருக்கும் என மக்கள் நம்ப வேண்டும் அதன்பின்பு தான் இது போன்ற மாற்றங்களை அரசு கையில் எடுக்க வேண்டும் இல்லை என்றால் மக்கள் இந்தத் திட்டத்தால் பெரும் அவதிப்படுவார்கள்.


Click it and Unblock the Notifications








